இந்தியாவில் 2026ஆம் ஆண்டிற்கான புத்தாண்டை வரவேற்கும் விதமாக பல்வேறு விரிவான ஏற்பாடுகள் செய்யபட்டிருந்தன. இதன் ஒரு பகுதியாக முக்கிய சுற்றுலா தளங்கள், பாரம்பரிய கட்டிடங்கள், விமான நிலையங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கடற்கரைகள், கோயில்கள், தேவாலயங்கள் போன்ற பொது இடங்களில் ஏராளமான இளைஞர்கள் ஒன்று கூடி புத்தாண்டை வரவேற்க தயாராக இருந்தனர். இந்நிலையில் நள்ளிரவு 12 மணியை எட்டியதில் இருந்து புத்தாண்டை நாட்டின் பல்வேறு இடங்களில் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 

Advertisment

அந்த வகையில் பட்டாசு வெடித்து வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். மேலும் ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். அதோடு கேக் வெட்டி ஆட்டம் பாட்டம் என புத்தாண்டை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர். அதே வேளையில் நாட்டின் பல்வேறு இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து போலீசார் வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். புத்தாண்டு பிறப்பையொட்டி கோயில்கள், தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகளும் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே புத்தாண்டை ஒட்டி சென்னையின் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கை செய்வதற்காக காவல்துறை சார்பில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

Advertisment

இதன் மூலம் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள், பைக் சாகசங்களில் ஈடுபடுவோரைக் கண்காணிக்கச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதே சமயம் புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் புகழ்பெற்ற சுற்றுலாதளமான மாமல்லபுரத்திற்கு  வரும் வாகனங்களை போலீசார் சோதனை செய்து அனுப்பி வருகின்றனர். அதிகளவில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க அறைகள் முன்பதிவு செய்திருந்தால் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிப்படுகின்றனர்.  

2026

கொடைக்கானல் நட்சத்திர ஏரிப் பகுதியில் நேற்று (31.12.2025) இரவு 7 மணி முதல் இன்று (01.01.2025) காலை 6 மணி வரை சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை என காவல்துறையினர் அறிவித்துள்ளனர். அதே போன்று கடலூர் மாவட்டம் வெள்ளி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை எனத் தெரிவிக்கபட்டுள்ளது நேற்று இரவு 8 மணி முதல் இன்று காலை 6 மணி வரை பொதுமக்கள் வர வேண்டாம் என காவல்துறை அறிவித்துள்ளது. மற்றொருபுறம் 
 கடற்கரையில் இருப்போரை காவல்துறையினர் அங்கிருந்து  வெளியேற்றினர்

Advertisment

சென்னை அண்ணாநகரில் புத்தாண்டு கொண்டாட்டம் களைக்கட்டியுள்ளது. இதற்காக பொதுமக்கள் பெருமளவில் அப்பகுதியில்  குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காரணமாக கடற்கரை பகுதிக்கு வரும் சாலைகள் அனைத்திலும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறுவர் சிறுமிகளின் கைகளில் பெற்றோரின் செல்போன் எண் விபரங்களுடன் கூடிய பட்டை ஒட்டப்பட்டன. நக்கீரன் வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.