Advertisment

தேவநாதனிடம் 2000 கிலோ தங்கம்- பாதிக்கப்பட்டோர் தரப்பு ஆதங்கம்

a4544

2000 kg of gold in Devanathan's possession - victims' side allege Photograph: (police)

மோசடி புகாரில் கைது செய்யப்பட்டுள்ள தேவநாதனிடம் 2000 கிலோ தங்கம் இருப்பதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.

தேவநாதன் இயக்குநராக இருந்த 'தி மயிலாப்பூர் இந்து பர்மனென்ட் ஃபண்ட்' நிறுவனத்தில் பலர் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டிருந்தனர். சுமார் நூற்றுக்கு மேற்பட்டோரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக தேவநாதன் யாதவ் மீது புகார் எழுந்ததைத் தொடர்ந்து  தேவநாதன் உட்பட ஆறு பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

வழக்கிலிருந்து வெளியே வர தேவநாதன் தரப்பு தொடர்ந்து ஜாமீன் பெறும் முயற்சியில் இறங்கி வருகிறது. தேவநாதன் யாதவ் உட்பட 3 பேர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு  வந்தது.

அப்பொழுது பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் 'தேவநாதன் யாதவிடம் சுமார் 2000 கிலோ தங்கம் இருக்கிறது. தேவநாதன் குறித்து தாக்கல் செய்யப்பட்ட சொத்து ஆவணங்களில் அந்த 2000 கிலோ தங்கம் குறித்த ஆவணங்கள் இடம்பெறவில்லை. அந்த 2000 கிலோ தங்கத்தை கைப்பற்றினாலே தங்களுக்கு கொடுக்கவேண்டிய பணத்தை வட்டியுடன் திருப்பி அளிக்க முடியும்' என தெரிவித்தார்.

அப்பொழுது பொருளாதார குற்றப்பிரிவு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 'நீதிமன்றத்தில் தேவநாதன் யாதவ் தாக்கல் செய்த 300 கோடி ரூபாய் சொத்து ஆவணங்களை ஆய்வு செய்ததில் பாதிக்கும் அதிகமான சொத்துக்கள் வில்லங்க சொத்துக்கள் என தெரிய வந்துள்ளது' என தெரிவித்துள்ளார்.

காவல்துறையின் வாதம் குறித்து ஆகஸ்ட் ஒன்றாம் தேதி பதிலளிக்க தேவநாதன் யாதவ் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி இளந்திரையன், வழக்கை அன்றைய தினத்திற்கு ஒத்தி வைத்தார். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட அனைவரின்  நலனும் பாதுகாக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
Advertisment
highcourt police b.j.p cheating money devanathan yadav
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe