2,000 candidates absent for Assistant Inspector exam in Cuddalore
கடலூரில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தினால் உதவி ஆய்வாளருக்கான எழுத்து தேர்வு எழுத 7ஆயிரத்து 228 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 5 ஆயிரத்து 56 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். இதில், 2 ஆயிரத்து 172 பேர் தேர்வு எழுத வரவில்லை.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தினால் உதவி ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு, கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம், செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி, கடலூர் வில்வ நகர் கிருஷ்ணசாமி மெமோரியல் மேல்நிலைப்பள்ளி, செல்லங்குப்பம் சி.கே. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, ஜெயராம் நகர், செல்லங்குப்பம், கடலூர் திருப்பாதிரிபுலியூர் அரிஸ்டோ பப்ளிக் மேல்நிலைப்பள்ளி, கடலூர் புதுப்பாளையம் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி, கடலூர் சி.கே. மேல்நிலைப்பள்ளி ஆகிய 7 தேர்வு மையங்களில் நடைபெற்றது.
பொது எழுத்துத் தேர்வு காலை 10மணி முதல் 12.30 மணி வரை நடைபெற்றது. தமிழ் மொழிக்கான தகுதி தேர்வு மதியம் 3.30 மணி முதல் 5.10 மணி வரை நடைபெற்றது. இம்மாவட்டத்தில் ஆண்கள் 5,368 பேர் மற்றும் பெண்கள் 1,860 பேர் என மொத்தம் 7228 தேர்வர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த நிலையில் ஆண்கள் 3758 பேரும், பெண்கள் 1298 என மொத்தம் 5056பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 2,172பேர் தேர்வு எழுத வரவில்லை.
Follow Us