கள்ளக்குறிச்சியில் முதிய தம்பதிகள் வாழ்ந்து வந்த வீட்டில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்து 200 சவரன் நகையை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்துள்ள கடுவனூர் கிராமத்தைச் சேர்ந்த கேசரிவர்மன் என்பவர் வீட்டுக்குள் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்து 200 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக கேசரி வர்மன் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் ஸ்பாட்டுக்கு வந்த மாவட்ட எஸ்.பி தலைமையிலான போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல கடுவனூர் கிராமத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பாக்கம் கிராமத்தில் ராமலிங்கம் என்பவர் வீட்டில் எகிறி குதித்து மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். இதனையறிந்த ராமலிங்கம் கூச்சலிட்ட நிலையில் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. கடுவனூர் கிராமத்தில் 200 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டதும், அதேபோல் பாக்கம் கிராமத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் ஒரே கும்பல் தானா என்ற கோணத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.