மருத்துவத் துறையில் உள்ளது போல் வருவாய் துறையினருக்கும் பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். அனைத்து பணிகளையும் மேற்கொள்ளும் வருவாய் துறையினருக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் (FERA) காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதன்படி கடந்த 6 நாட்களாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்
இந்நிலையில் அடுத்த கட்ட போராட்டமாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (04.03.2026) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 200 பேரை காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/04/arrest-2026-03-04-13-09-51.jpg)