'20 years of 'espionage'; Blues Spore completed' - shocking information revealed Photograph: (iran)
கடந்த பிப்ரவரி 28 முதல் அமெரிக்காவும் இஸ்ரேலும் "ஆபரேஷன் எபிக் ஃப்யூரி" என்ற பெயரில் ஈரானிய ராணுவம், அணுசக்தி மற்றும் தலைமைத்துவ தளங்களை குறிவைத்து மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் நடந்த உயர்மட்டத் தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் பல உயர் இராணுவ மற்றும் அரசியல் பிரமுகர்கள் இறந்துள்ளது பரபரப்பான சூழலை மத்திய கிழக்கில் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நட்பு நாடுகளான துபாய் பஹ்ரைன், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரால், சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் கமேனி உயிரிழப்பு தொடர்பான பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவரை கொல்வதற்காக ரகசியமாக தயாரிக்கப்பட்ட 'ப்ளூஸ் ஸ்போரோ' ஏவுகணையை இஸ்ரேல் பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. மேலும் 20 ஆண்டுகளாக உளவு பார்த்து அதன் மூலம் கிடைத்ததகவல்களை கொண்டு அவர் மீது இந்த அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலிய தளபதிகள் விடுமுறையில் செல்வது போன்றும், ராணுவ தலைமையகம் மூடப்பட்டது போலவும் புகைப்படங்களை வெளியிட்டு அதன் மூலம் ஈரானின் கவனத்தைத் திசைதிருப்பிய பிறகு, சனிக்கிழமை அதிகாலை 30-க்கும் மேற்பட்ட குண்டுகளை வீசி கமெனியை கொன்றுள்ளனர். அதேபோல அமெரிக்காவும் தனது நவீன ஏவுகணைகளை முதல் முறையாக பயன்படுத்தி ஈரானின் முக்கிய இலக்குகளை குறிவைத்து அழித்து இருப்பது தெரியவந்துள்ளது.
Follow Us