அரசுப் பள்ளியில் தடுப்புகள் இல்லாமல் கழிவறை கட்டிய விவகாரத்தில் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை பேரூராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேம்பாட்டு மானியத்தில் 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கழிப்பறை கட்டப்பட்டது. இந்த கழிப்பறை கடந்த 6ஆம் தேதி மாணவிகளின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டது. இத்தகைய சூழலில் தான் இந்த கழிப்பறையில் தடுப்புச் சுவர்கள் இல்லாததால் இந்த விவகாரம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதனையடுத்து கழிப்பறையில் அவசர அவசரமாகத் தடுப்புச் சுவர்கள் கட்டும் பணி நடைபெற்றது. இந்நிலையில் கழிப்பறையின் குறுக்கே தடுப்புச் சுவர்கள் கட்ட தவறியதாகக் கூறி பேரூராட்சியின் இளநிலை பொறியாளர் ரமேஷ் , செயல் அலுவலர் கமலக்கண்ணன் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுச் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இது குறித்து துறை ரீதியான விசாரணை நடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.