தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள சூழலில், பரவலாக பல மாவட்டங்களில் மழை பொழிந்து வருகிறது. இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள சூழலில், ஒரே நேரத்தில் இரண்டு புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

முன்னதாக, 24-ம் தேதி வங்கக்கடலில் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது முன்கூட்டியே வரும் 21-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்பிறகு, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தெற்கு வங்கக்கடல் பகுதிக்குச் செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவுப் பகுதியில், கேரள-கர்நாடக கடற்கரையில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தீவிரமடைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஒரே நேரத்தில் இரண்டு புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்திற்கு அதிகளவில் மழை பொழிவு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.