2 lost lives due to two wheeler excessive speed on Accident involving workers
சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒரு தொழிலாளி மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்தவர் என இருவர் உயிரிழந்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த உள்ளி பகுதியில் நேற்று இரவு பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தார் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தோட்டம் பகுதியைஅ சேர்ந்த வினித் குமார் மற்றும் சுரேந்தர் ஆகிய இருவர் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது மோதியுள்ளனர். இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் உட்பட தொழிலாளர்கள் என மொத்தம் ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இவர்கள் குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி பிரகாஷ்ராஜ் (28) மற்றும் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த வினித் குமார் (23) ஆகிய இருவர் இன்று காலை உயிரிழந்துள்ளனர். இதுக்குறித்து குடியாத்தம் தாலுக்கா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow Us