Advertisment

1998 கோவை குண்டு வெடிப்பு; முக்கிய நபர் கைது- கோவையில் பரபரப்பு

a4357

1998 Coimbatore blasts; Key person arrested - excitement in Coimbatore Photograph: (kovai)

கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11 இடங்களில் தொடர்ச்சியாக குண்டுகள்  வெடித்தது. இதில் 58 பேர் உயிரிழந்தனர். 250க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அன்றைய காலகட்டத்தில் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த இந்த சம்பவம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர்.

Advertisment

156 பேர் கைது செய்யப்பட்டு அதில் 16 பேர் தற்போதுவரை சிறை தண்டனையை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவத்தில் முக்கியக் குற்றவாளிகளாக கருதப்பட்ட இரண்டு நபர்கள் தலைமறைவாக இருந்தனர். டைலர் ராஜா மற்றும் அபுபக்கர் என்ற இருவர் இந்த வழக்கில் பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தனர். தொடர்ந்து தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார்டெய்லர் ராஜா என்கிற சாதிக் ராஜாவை தேடிவந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் ஜெய்ப்பூரில் வைத்து சாதிக் ராஜாவை கைது செய்து கோவை அழைத்து வந்துள்ளனர். 

சாதிக் ராஜாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் இது தொடர்பான முழுமையான விவரம் அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 1998 கோவை குண்டுவெடிப்பில் முக்கிய நபர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் கோவையில் அனைத்து காவல் நிலையங்களும் உஷார் படுத்தப்பட்டுள்ளது.

chattishghar bomb blast kovai police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe