பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ரகசிய தகவல் கசியவிட்ட வழக்கில் தற்போது சிறையில் இருக்கிறார். இந்த வழக்கு அல்லாது அறக்கட்டளை முறைகேடு வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இவர் மீது இருக்கின்றது. இந்த நிலையில் மற்றொரு ஊழல் வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு தற்போது 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

Advertisment

இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது 2021 ஆம் ஆண்டு தனது மனைவி புஷ்ரா பீபியுடன் அரசு முறை பயணமாக சவுதி அரேபியா சென்றிருந்தார். அப்போது அந்நாட்டு மன்னர், இம்ரான் கானின் மனைவிக்கு விலை உயர்ந்த நகைகளை பரிசாக வழங்கினார். பாகிஸ்தான் விதிகள் படி வெளிநாட்டு பயணங்களின் போது கிடைக்கும் விலை உயர்ந்த பரிசுகளை அரசு கருவூலமான தோஷகானாவில் ஒப்படைக்க வேண்டும். ஆனால் இம்ரான் கான் இந்த பரிசை குறைந்த விலைக்கு அரசிடம் செலுத்தி தன் வசம் வைத்துக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக இம்ரான் கான் மீதும் அவரது மனைவி மீதும் புலனாய்வு அமைப்பான எஃப்.ஐ.ஏ. வழக்கு தொடர்ந்தது.

Advertisment

இந்த வழக்கில் சிறையில் இருக்கும் சிறப்பு நீதிமன்றமத்தில் நீதிபதி ஷாருக் அர்ஜுமந்த் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார். அதன்படி இம்ரான் கான் மற்றும் அவரது  மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் தலா ரூ.1 கோடி அபராதம் விதித்தும் உத்தரவிட்டுள்ளார்.