வடலூர் சத்திய ஞான சபையில் 155-ஆம் ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர், அமைச்சர்கள் பங்கேற்றனர்.
வடலூர் வள்ளலார் சத்திய ஞானசபையில் 155-ஆம் ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனம் இன்று (பிப். 1) முதல் தைப்பூச ஜோதி தரிசனம் காலை 6 மணியளவில் திரையை விலக்கிக் காண்பிக்கப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் மற்றும் பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.
இதில் காலை 10 மணி இரண்டாம் ஜோதியில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கேபன்னீர்செல்வம், தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து மதியம் 1 மணி ஜோதி தரிசனத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாக திருமாளிகையில் பிப் 3-ஆம் தேதி திருஅறை தரிசனம் நடைபெற உள்ளது. இதில் ஜோதி வடிவமாக மறைந்த வள்ளலார் உயிர்த்தெழுந்தார் என சன்மார்க்க அன்பர்கள் நம்பிக்கையுடன் வள்ளலார் தங்கிய அறையில் அவர் பயன்படுத்திய பொருட்களைப் பார்வையிட்டுச் செல்வார்கள்.
தைப்பூசத்தையொட்டி கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழக முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வடலூரில் குவிந்து வருகின்றனர். பல லட்சம் பேர் குவிந்தாலும் ஒருவரும் பசியில்லாமல் செல்ல வேண்டும் என்று வடலூரில் பல்வேறு இடங்களில் சாலையில் உணவு சமைத்து வழங்கியவாறு உள்ளனர். இது தைப்பூச விழாவை விட பசியைப் போக்கும் உணவு வழங்கும் விழாவாக அமைந்துள்ளது.
சன்மார்க்க அன்பர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் கடலூர் மாவட்ட காவல்துறையினர் போக்குவரத்துகளை சீர் செய்து தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/01/808-2026-02-01-17-40-12.jpg)