தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள நர்சிங்கி பப்புலகுடாவை சேர்ந்தவர் திவ்யா (வயது 15 / பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர், கடந்த 7ஆம் தேதி சார்மினார் பகுதியில் உள்ள கடைத் தெருவிற்குப் பொருட்கள் வாங்கச் சென்றார். அந்த பகுதியில் நடைபாதையில் 16 வயதுள்ள சிறுவன் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறான். திவ்யா அந்த கடையில் பொருள் வாங்கும் போது, அவரிடம் இயல்பாகப் பேசிய அந்த சிறுவன் மாணவியின் போன் நம்பரை வாங்கியுள்ளான்.
அதன் பின்னர், தினமும் மாணவிக்கு போன் செய்து தொடர்ந்து நட்பாகப் பேசிவந்துள்ளன. இது காலப்போக்கில் காதலாக மாறியது. இந்த நிலையில், கடந்த 16 தேதியன்று மாணவியை அந்த சிறுவன் சார்மினார் பகுதிக்கு வருமாறு கூறியுள்ளான். மாணவியும் அந்த சிறுவன் சொன்ன இடத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அந்த சிறுவன், தனது நண்பர்களான இம்ரான்கான் (வயது 24) மற்றும் மற்றொரு 16 வயது நண்பனையும் அந்த இடத்திற்கு வரவழைத்தான். அதன் பின்னர், அவர்கள் மூன்று பேரும் சேர்ந்து மாணவியை ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவர்கள் மது அருந்தியதுடன், மாணவிக்கும் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றியுள்ளனர். மாணவி மயக்க நிலைக்குச் சென்றவுடன் அவர்கள் மூன்று பேரும் சேர்ந்து, கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனிடையே, பள்ளிக்குச் சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், பெற்றோர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். மாணவி எங்கேயும் கிடைக்காததால் பதறிப்போன பெற்றோர்கள், காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/21/arrest-2026-02-21-08-08-44.jpg)
இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள கேமராக்கள் மற்றும் தொழில் நுட்ப உதவியுடன் மாணவி இருக்கும் இடத்தை கண்டறிந்தனர். சம்பவ இடத்தில் இம்ரான்கான் மற்றும் 16 வயது சிறுவனைக் கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள மற்றொரு சிறுவனைத் தேடி வருகின்றனர். ஆட்டோ ஓட்டுநராக இருந்து வரும் இம்ரான்கான் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை மற்றும் திருட்டு என மொத்தம் 8 வழக்குகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Follow Us