நின்றிருந்த லாரி மீது பேருந்து மோதியதில் 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ராஜஸ்தான் மாநிலம், பலோடி மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது, அங்கு வந்த தனியார் பேருந்து ஒன்று லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர், 3 பேர் காயமடைந்தனர்.

Advertisment

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், ஜோத்பூரியைச் சேர்ந்தவர்கள், கபில் முனி ஆசிரமத்தில் பிரார்த்தனை செய்துவிட்டு பிகானரில் இருந்து பேருந்து மூலம் திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து மாநில முதல்வர் பஜன் லால் ஷர்மா இரங்கல் தெரிவித்ததோடு, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும், காயமடைந்தவர்களுக்கு சரியான மருத்துவ சேவையையும் உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Advertisment