தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் காவல் உட்கோட்டம் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வீரபாண்டிய பட்டினத்தில் உள்ள ஒரு டிம்பர் டிப்போ பின்புறம் உள்ள கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்தல் நடைபெறுவதாக தூத்துக்குடி க்யூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதாவிற்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் உதவி ஆய்வாளர் ராமசந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், தலைமை காவலர் மணிகண்டன், இருதயராஜ், குமார், இசக்கிமுத்து. காவலர்கள் பேச்சி, ராஜா மற்றும் காபிரியேல் ஆகியோர் இன்று 22.11.25ம் தேதி அதிகாலை 2 மணி அளவில் வீரபாண்டிய பட்டினம கடற்கரையில் ரோந்து பணியில் இருந்தனர். படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டுவரப்பட்டு கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த
1.Hydroxyprogesterone caproate injection IP.
Quantity 890 Nos
2.Intravenous fat Emulsion for infusion Syrup
Quantity 444 Nos
3) Pregab Tablets
Quantity 750000 Nos
4) Disulfiram tablets 1.P (Esperal) Tablets-
Quantity 77900 Nos
5.Cadila Tablet
Quantity 11750 Nos
6.Amantrel Tablet
Quantity 2100 Nos
என மொத்தம் 15 மூட்டைகளில் இருந்தமருந்து பொருள்களை கைப்பற்றி இருக்கிறார்கள். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகில் எதிரிகள் தப்பி ஓடிவிட்டார்கள். கைப்பற்றப்பட்ட 15 மூட்டை மருந்து மற்றும் மாத்திரை பொருட்கள் மேல் நடவடிக்கைக்காக சுங்கத்துறை வசம் ஒப்படைக்க பட உள்ளது. கைப்பற்ற பட்ட மருந்து பொருட்களின் மதிப்பு சுமார் ஒரு கோடி இருபத்து ஐந்து இலட்சம் ஆகும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/22/a5772-2025-11-22-22-05-18.jpg)