கன்னியாகுமரி மாவட்டம், அம்மாண்டிவிளை அருகே குழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பிரவின். இவருக்கு கேசவ் என்ற 15 மாத ஆண் குழந்தை உள்ளது. குழந்தை கேசவ் வீட்டில் உள்ள பிளாஸ்டிக் சேரில் உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருந்தான். தாயார் வீட்டில் சமையல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக குழந்தையின் கால், பிளாஸ்டிக் சேரின் குழாய் வடிவிலான காலின் துவாரத்தில் சிக்கியது.

Advertisment

சமையல் செய்து கொண்டிருந்த தாய், சத்தம் கேட்டு ஓடி வந்து மீட்க முயன்றும் முடியவில்லை. இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்படி, தக்கலை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜீவன்ஸ் தலைமையிலான துறை வீரர்கள் விரைந்து வந்து நாற்காலியின் அடிப்பகுதியை உடைத்து குழந்தையைப் பத்திரமாக மீட்டனர்.

Advertisment