அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பாரதியார் உருவச் சிலைக்கு தமிழக செய்தித் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் தலைமையில் மலர் மரியாதை செலுத்தப்பட்டது. மகாகவி பாரதியார் அவரது வாழ்நாளில் நாடு முழுக்க பல்வேறு ஊர்களுக்கு சென்று சொற்பொழிவு ஆற்றியுள்ளார். அதன் தொடர்ச்சியாக பாரதியார் இறப்பதற்கு முன்பு ஈரோட்டில் ஒரு நூலகத்தில் சொற்பொழிவாற்றியுள்ளார்.
மகாகவி பாரதியார் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள அரசு நூலகத்தில் "மனிதனுக்கு மரணம் இல்லை" என்ற தலைப்பில் அங்கு கூடியிருந்த மக்களிடம் உரையாற்றினார். பாரதியாரின் இறுதிச் சொற்பொழிவு நிகழ்ந்த இடம் ஈரோடு கருங்கல்பாளையம் நூலகம்.
ஒவ்வொரு வருடமும் பாரதியார் பிறந்தநாளன்று பாரதியாரின் தியாகத்தை போற்றும் வகையில் இந்த. ஈரோடு நூலகத்தில் பல்வேறு அமைப்பினர் பாரதியார் சிலைக்கு மலர் மரியாதை செலுத்தி பல நிகழ்ச்சிகள் நடத்துவதுண்டு.
ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை ஒவ்வொரு வருடமும் பாரதி விழா இன்றைய தினம் நடத்துகிறது. அதற்கு முன்பு பள்ளி மாணவ, மாணவியர்கள் இந்த நூலகத்திலிருந்து பாரதியார் ஜோதியை எடுத்து பாரதி விழா நடைபெறும் இடத்திற்கு கொண்டு செல்வார்கள் இந்த வருடமும் இவை நடந்தது.
இந்நிலையில், பாரதியார் இறுதி சொற்பொழிவு நிகழ்த்திய இந்த நூலகத்துக்கு உட்பட்ட கருங்கல்பாளையம் 40 ஆவது வார்டு பகுதி ஈரோடு மாநகராட்சி திமுக உறுப்பினர் வழக்கறிஞர் ரமேஷ் குமார் தலைமையில் அரசு நூலக பொறுப்பாளர் கலைவாணி மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் பாரதியார் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு பள்ளி மாணவிகளுக்கு பாரதியார் நூல்கள் வழங்கி பாரதியார் புகழ் போற்றுவோம் என புகழ அஞ்சலி செலுத்தினார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/11/bhara-2025-12-11-14-54-52.jpg)