செங்கல்பட்டில் திமுக பிரமுகரும், தொழிலதிபருமான ரித்திஷ் என்பவர் வீட்டில் 140 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள்கோவில் அருகே பாரதியார் தெருவில் வசித்து வருபவர் ரித்தீஷ். திமுக பிரமுகரும், தொழிலதிபருமான ரித்திஷ் அருகிலேயே பக்கத்துத் தெருவில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றிருந்த ரித்தீஷ் காலை வீட்டிற்கு வந்த பொழுது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.

Advertisment

உள்ளே சென்று பார்த்தபோது 140 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக போலீசாருக்கு புகார் தெரிவித்த நிலையில் அங்கு வந்த கூடுவாஞ்சேரி உதவி ஆணையர் தலைமையிலான 20க்கும் மேற்பட்ட போலீசார் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டின் பூட்டை உடைத்து 140 சவரன் நகைகள் கொள்ளைபோன இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.