அனைத்து துறைகளிலும் முதல் மாநிலம் என்ற திசையில் பயணித்து வரும் தமிழ்நாட்டில், 2026லும் திராவிட மாடல் 2.0 அரசு அமையும் என்கிற நம்பிக்கையில் முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார். அதேசமயம் பெருவாரியான பொதுமக்களின் பங்களிப்புடன் ஆட்சி அமைந்து செயலாற்றிட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறார்.

Advertisment

இந்த நிலையில், 2026தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கைக்காக பொதுமக்களின் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் பெறும் வகையிலான அலைபேசி எண், வலைதள விவரம், சமூக வலைதள தொடர்புகள், செயற்கை நுண்ணறிவு வலைவாசல் (portal) ஆகியவற்றை சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். இதனையடுத்து, மாநிலம் முழுக்கவும் கருத்துகளையும் பரிந்துரைகளையும் வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

Advertisment

கோரிகைகள் குறித்து தங்களின் யோசனைகளைத் தெரிவியுங்கள் என செயலி அறிமுகம் செய்யப்பட்ட முதல் நாளிலியே, தொலைபேசி வழியாக 1,188, வாட்ஸ் ஆப் வழியாக 7,527, மின்னஞ்சல் வழியாக 251, இணையதளம் வழியாக 2015, கியூஆர் ஸ்கேன் (QR scan) வழியாக 692, ஏஐ (AI) வலைவாசல் வழியாக 2645 என மொத்தம் 14,318 கோரிக்கைகளும், பரிந்துரைகளும் பெறப்பட்டுள்ளன.