செங்கல்பட்டை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் தன்னுடைய பெற்றோர் தன்னை பாலியல் தொழிலுக்குள் தள்ளியதாக பள்ளி ஆசிரியரிடம் தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்துள்ளது முதுகரை. இந்த பகுதியில் வசித்து வந்த பள்ளி மாணவி ஒருவர் தான் தன்னுடைய பெற்றோர்களாலேயே தான் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்பட்டதாகவும், பள்ளி கோடை விடுமுறை நேரத்தில் தனக்கு இந்த கொடுமை நடந்ததாகவும் ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர் உடனடியாக சைல்டு கேர் லைனுக்கும் அதேபோல மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார்.

ஆசிரியர் கொடுத்த தகவலின் அடிப்படையில் முதுகரையைச் சேர்ந்த செல்வம் மற்றும் முருகன் என்ற நபர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் அந்த அதிர்ச்சி தகவல் வெளியானது.

பாதிக்கப்பட்ட பள்ளிச் சிறுமியின் தாயார் அதிக ஆண்களிடம் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. தற்போது மூன்றாவது கணவர் முருகனுடன் சிறுமியின் தாய் வாழ்ந்து வந்துள்ளார். தந்தை ஸ்தானத்தில் இருந்த முருகன் பள்ளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அடுத்தடுத்து 40 முதல் 60 வயதுக்கு மேற்பட்ட 13 பேருக்கு சிறுமியை இருவரும் கட்டாயப்படுத்தி இரையாக்கியது தெரிய வந்தது.

Advertisment

a4810
கைது செய்யப்பட்ட செல்வம், முருகன் Photograph: (pocso act)

Advertisment

மதுராந்தகத்தில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து மாணவியை அங்கே அனுப்பி பாலியல் தொழில் உட்படுத்தியது தெரிய வந்தது. கொடூரமாக தன்னை பயன்படுத்திய தாய் மற்றும் தந்தையிடம் இருந்து தப்பிக்க நினைத்த சிறுமி பள்ளி விடுதியிலேயே தங்கி இருந்துள்ளார். 'விடுமுறை நாளிலாவது வீட்டுக்கு வா' என அக்கறையாக அழைப்பது போல் அழைத்து நம்பிச் சென்ற மாணவியை மீண்டும் பாலியல் தொழிலுக்கு உட்படுத்தி உள்ளனர் அந்த கொடூர பெற்றோர். இதனால் உடல் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி ஒருகட்டத்தில் பொறுக்க முடியாமல் ஆசிரியரிடம் கொடூர தாய், தந்தையால் தனக்கு நேர்ந்த கொடுமையை தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.