கர்நாடகாவில் அம்மாநில முதல்வர் கலந்து கொண்ட நிகழ்வில் பன்னிரண்டு பெண்கள் மயக்கமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா பகுதியில் அம்மாநில முதல்வர் சீத்தாராமையா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இதற்காக பல்வேறு மக்கள் அங்குக் கூடியிருந்தனர். கூட்டத்தில் குடிநீர் மற்றும் உணவு ஆகிய அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்ற 12க்கும் மேற்பட்ட பெண்கள் மயக்கம் அடைந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
மயக்கம் அடைந்த பெண்களின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும், பெரும்பாலானோர் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட அந்த நிகழ்ச்சியில் குறிப்பிட்ட அளவிற்கு அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி ஏராளமானோர் திரண்டதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 12 பெண்கள் மயக்கம் அடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/20/a5581-2025-10-20-18-57-28.jpg)