புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதிக்கு ராமநாதபுரம் பகுதியில் இருந்து கஞ்சா பண்டல்கள் கொண்டு வந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்த உள்ளதாக மணமேல்குடி கடலோர காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலறித்து கடலோர காவல் துறையினர் சோதனைகளை மேற்கொண்டனர்.

Advertisment

இந்நிலையில் மணமேல்குடி அருகே அந்தோணியார்புரம் கடல் பகுதியில் ஒரு மீன்பிடி நாட்டுப்படகில் கஞ்சா பண்டல்கள் ஏற்றப்பட்டு கடலுக்குள் செல்ல தயாராக உள்ளனர் என்ற தகவலை அடுத்து கடலோர போலீசார் அங்கு விரைந்து சென்ற போது படகு தயாராக இருந்தது. படகில் அந்தோணியார்புரம் ஆரோக்கிய ராகுல் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ராஜேஸ்வரன் ஆகிய இருவர் இருந்தனர். அவர்களை பிடித்த போலீசார் 110 கிலோ கஞ்சா பண்டல்களையும், படகு, செல்போன்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர். எத்தனை முறை பிடிபட்டாலும் தொடர்ந்து இந்தப் பகுதியிலிருந்து கஞ்சா கடத்தல்கள் குறையவில்லை என்பது அந்த பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. 

Advertisment