Advertisment

இரவில் நேரத்தில் பகீர்; பெண்ணுக்கு நேர்ந்த சோகம் - ஐயப்ப பக்தர்கள் மருத்துவமனையில் அனுமதி!

1

தூத்துக்குடி கீழ சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி 42 வயதான ஜெயசித்ரா. இந்த நிலையில் ஜெயசித்ரா தனது இரண்டு குழந்தைகளுடன் உசிலம்பட்டியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு விட்டு, பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, 30 ஆம் தேதி இரவு தூத்துக்குடிக்கு காரில் திரும்பிக்கொண்டிருந்தார். அந்தக் காரைத் தூத்துக்குடியைச் சேர்ந்த 55 வயதான கணேஷ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.

Advertisment

மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் தூத்துக்குடிக்கு 15 கிலோமீட்டர் முன்பாக உள்ள குறுக்குச்சாலை அருகே திடீரென சாலையின் வலது புறத்தில் காரை டிரைவர் நிறுத்தியுள்ளார். அப்போது சில நிமிடங்களில் பின்னால் வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்களின் வேன் ஒன்று, நின்றுகொண்டிருந்த கார் மீது பயங்கரமாக மோதி சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்தது.

Advertisment

காரும் இந்த விபத்தில் முற்றிலுமாக சேதமடைந்தது. இதில் காரில் இருந்த ஜெயசித்ரா, வேனில் இருந்த ஐயப்ப பக்தர்கள் கொளஞ்சி, ரவிகுமார், அழகன், திருமலை, சதீஷ்குமார், பிரவீண், கிரண், ராணி, சந்திரசேகர், வள்ளி மற்றும் வேன் ஓட்டுநர் ஆஷிப் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

5

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் காரில் பயணித்த ஜெயசித்ரா மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து குறித்து ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே விபத்து தொடர்பான பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் - எஸ்.மூர்த்தி

accident police Thoothukudi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe