கடலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 100 உடல் தானம் படிவம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisment

சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனம் அமைய  பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த ரஷ்யா உதவி  செய்ய முன் முயற்சி எடுத்த மறைந்த தோழர் பி  ராமமூர்த்தி நினைவாக 100 உடல் தானம் படிவம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisment

இந்நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி ரமேஷ்பாபு தலைமை தாங்கினார்.  சிதம்பரம் நகர செயலாளர் ராஜா அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். கண்ணன், மாவட்ட செயலாளர் கோ.மாதவன், முன்னாள் மாவட்ட செயலாளர் டி.ஆறுமுகம்,   முன்னாள் மாநில குழு உறுப்பினர் மூசா ஆகியோர் கலந்து கொண்டு இறப்புக்குப் பின் உடலை தானமாக வழங்குவதால் மருத்துவ ஆராய்ச்சி மூலம் ஏழை எளிய மக்கள் பயன்பெறுவார்கள் என்று பேசினர். உடல் தனத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து செய்து வரும் என்றனர். 

இதனைத் தொடர்ந்து பூர்த்தி செய்த 100 உடல் தானம் படிவத்தை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். கண்ணன் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் திருப்பதி, மருத்துவ கண்காணிப்பாளர் ஜூனியர் சுந்தரேசன், துணை கண்காணிப்பாளர் பரசுராமன் உள்ளிட்ட மருத்துவக் குழுவினரிடம் வழங்கினார்.

Advertisment

இந்நிகழ்வில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி கருப்பையன் ராமச்சந்திரன், திருஅரசு, தேன்மொழி, பிரகாஷ், வாஞ்சிநாதன் அமர்நாத் அண்ணாமலை நகர் பேரூராட்சி துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி, முதல்வர் மருந்தக உரிமையாளர் நிலமங்கை இளவரசன்,

சிபிஎம் கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் செல்லையா, குமராட்சி ஒன்றிய செயலாளர் மனோகர் புவனகிரி செயலாளர்,காளி கோவிந்தராஜன் நகர மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன் மாவட்ட  குழு உறுப்பினர்கள் தண்டபாணி சரவணன்  இளங்கோவன் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர். மாவட்ட குழு உறுப்பினர் மல்லிகா அனைவருக்கும் நன்றி கூறினார்.