விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள தெற்காறு பகுதியில், இரு இடங்களில் குவிக்கப்பட்டிருந்த மொத்தம் 10 யூனிட் ஆற்று மணலை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரியாபட்டியை அடுத்த ஆத்திகுளம் பேருந்து நிறுத்தம் பின்புறம் உள்ள தெற்காறு கரையில், இரு தனித்தனி இடங்களில் தலா 5 யூனிட் அளவில் ஆற்று மணல் குவித்து வைக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் அங்கு இருந்த மொத்தம் 10 யூனிட் ஆற்று மணலை பறிமுதல் செய்தனர். இந்த மணலை யார் குவித்து வைத்தனர்? தெற்காறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தியவர்கள் அதிகாரிகளுக்கு அஞ்சி மணலை அங்கு கொட்டி விட்டுச் சென்றார்களா? என்ற கோணங்களில் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தெற்காறு பகுதியில் சட்டவிரோத மணல் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில், ஆற்றங்கரையில் மணல் குவியல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/03/09/1050-2026-03-09-18-22-39.jpg)