உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தோற்றால், ஆட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சியை போல் ஆகிவிடுவோம் என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தோற்றால், ஆட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சியை போல் ஆகிவிடுவோம். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே ஜெயலலிதா படத்தை சட்டசபையில் திறக்க எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
டிடிவி தினகரன் 18 பேரில் ஒருவரை முதல்வராக்குவேன் என ஆசைவார்த்தை கூறி ஏமாற்றுகிறார். அதிமுகவை கைப்பாவை பொம்மையாக ஆட்டுவிக்க முயற்சிக்கும் தினகரனின் கனவு நிறைவேறாது. பதவியை பிடிக்க துடிக்கும் தினகரனுக்கு மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.