Advertisment

பொருளாதார நெருக்கடியால் கட்சி அலுவலகத்தை வாடகைக்கு விடும் சி.பி.எம்!

CPM

Advertisment

பொருளாதார நெருக்கடி காரணமாக மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள கட்சி அலுவலகத்தை வாடகைக்கு விடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

மேற்கு வங்கம் மாநிலம் பூர்பா பர்தாமான் மாவட்டத்தில் உள்ளது குஸ்கரா நகரம். இங்குள்ள சி.பி.எம். கட்சி அலுவலம் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. மூன்று மாடிகளைக் கொண்ட இந்த அலுவலகத்தின் ஒரு பகுதியை ரூ.15,000க்கு வாடகைக்கு விட மார்க்சிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

அந்தப் பகுதியின் கமிட்டி செயலாளர் நாராயண் சந்திர கோஷ், ‘கட்சி அலுவலகத்தை மாதம் ரூ.15ஆயிரம் வாடகைக்குவிட முடிவு செய்துள்ளோம்’ என தெரிவித்துள்ளார். 2011 மற்றும் 2016ஆம் ஆண்டில் மேற்கு வங்கமாநில சட்டமன்றத் தேர்தல்கள் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்ததால், 34 ஆண்டுகால அசைக்கமுடியாத ஆட்சியைச் செய்த சி.பி.எம். கட்சிக்கு இந்த நிலை வந்துள்ளதாக அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisment

மேற்கு வங்கம் மாநிலத்தில் முன்னாள் முதல்வர் ஜோதிபாசுவின் ஆட்சிக்காலத்தில் கொடிகட்டிப் பறந்த சி.பி.எம். கட்சியின் கோட்டையாக இருந்தது பூர்பா பர்தாமான்ம் மாவட்டம். ஆனால், தற்போது அந்தத் தொகுதியில் 15 எம்.எல்.ஏ.க்கள் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். ஒரேயொரு சி.பி.எம். எம்.எல்.ஏ. மட்டுமே அங்கு உள்ளார்.

சி.பி.எம். கட்சியின் இந்த நிலை குறித்து பிற கட்சியினர் கடுமையாக விமர்சித்துள்ளனர். பூர்பா பர்தாமான் மாவட்டத்தின் பாஜக மாவட்டச் செயலாளர் சந்தீப் நந்தி, 'சி.பி.எம். கட்சியையே ஒருநாள் இழுத்து மூடுவதற்கான நேரம் வரும்' என தெரிவித்துள்ளார்.

CPM BJP West bengal Trinamool
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe