வரிசைக்கட்டி வாராரு விஜய்
இப்படியாக... நல்லப்பிள்ளையான விஜய்க்கு அடுத்து வரும் படங்கள் ஹிட்டாக அமையும் என்று திரைவட்டாரப் பேச்சுக்கள் அடிபடுதுங்க...
விஜய்யின் ‘‘வேலாயுதம்” (தெலுங்கு-ஆசாத்) படத்தை இயக்கிவரும் ராஜாவும் இதையே சொல்கிறார். “வேலாயுதம்” படம் இதுவரை விஜய்க்கு வந்தப் படங்களிலிருந்து சற்று மாறுபட்டது. இதில் ‘பஞ்ச் டயலாக்’ எல்லாம் இல்லை. இந்தப் படத்தில் புதுமாதிரியான விஜய்யை ரசிகர்கள் பார்க்கலாம். என்று உறுதிச்சான்று அளித்திருக்கிறார் ராஜா.
இயக்குனர் சித்திக்கும், “காவல் காதல்” ( மலையாளம்-பாடிகாட்) படம் விஜய்க்கு இந்த ஆண்டின் சிறந்தப் படமாக அமையும் என்கிறார்.