Home Home Page
ஸ்பெஷல்
நயன்தாராவுடன் நடந்தவை... சிம்புவின் வாலிபன்!
......................................
ரசிகர்களை திருப்திப் படுத்தும் ரஜினி...?
......................................
ரஜினியின் விருப்பம்! நிறைவேற்றுவாரா அஜீத்?
......................................
கொட்டியது மேளம், கட்டியது தாலி - வாழ்த்தியது வையகம்.
......................................
நீயா?... நானா? யுத்தம் - தனுஷ் படரிலீஸ் சிக்கல்
......................................
என்றென்றும் ’80 - ஸ்டார் நைட் கலாட்டா
......................................
வேலாயுதம் ரீமேக் தான் - இயக்குனர் ராஜா பேட்டி
......................................
நக்கீரன் அலுவலகத்தில் ரஜினி
......................................
ஈரானியன் ஸ்டைலில் அடுத்த படம் - சுசீந்திரன் பேட்டி தொடர்ச்சி...
......................................
உண்மைச் சம்பவமா? அனுபவமா? - சுசீந்திரன் பேட்டி
......................................
சிக்கு புக்கு ஒரு காதல் பயணம் - ஆர்யா
......................................
எந்திரன் தந்த மாற்றம் - சிரஞ்சீவி அதிரடி அறிவிப்பு
......................................
ஷங்கர் வழியில் கௌதம் மேனன்
......................................
நானும் கார்த்தியும் - காஜல் அகர்வால் பேட்டி
......................................
கலைஞர் கேட்ட விளக்கம்! - பாண்டிராஜ் பேட்டி 2
......................................
வம்சம் வளர்ந்த கதை - பாண்டிராஜ் சிறப்பு பேட்டி!
......................................
உலக ரசிகர்களை ஈர்க்கும் காந்தம் ரஜினிகாந்த்
......................................
தாத்தா வசனத்தில் நடிக்காத வருத்தம் -அருள்நிதி
......................................
ரசிகர்களுக்காக அஜித்தின் அட்வான்ஸ் ஆட்டம்
......................................
இளையராஜா இசையில் கௌதம் மேனன்
......................................
உலகம் தாண்டிய உயரம் - எந்திரன் சாதனை
......................................
எரிமலைகள் நடுவே கிளிமாஞ்சாரோ... - பா.விஜய் சிறப்பு பேட்டி
......................................
இளையராஜாவுடன் இணைவதில் எனக்கு மகிழ்ச்சி - கார்க்கி சிறப்பு பேட்டி
......................................
பூம் பூம் ரோபோ! அப்பாவுக்கு நான் போட்டியா... கார்க்கி - சிறப்பு பேட்டி
......................................
எனக்கு பிடித்த நாயகி - கார்த்தி பேட்டி
......................................
எந்திரன் - ரிலீஸ் தேதி முடிவாச்சு!
......................................
எந்திரனின் மந்திரன் ரஜினி - பேச்சு
......................................
அம்மணி பிரச்சனை ஓயலடா சாமி
......................................
மனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்
......................................
யப்பா சாமி! போதும்டா ஓட்டுனது ரீலு...
......................................
அனுஷ்காவோடு லாரன்ஸ் த்ரில்லிங்...
......................................
வரிசைக்கட்டி வாராரு விஜய் - இனி ஹிட்டு தான்!
......................................
திரிஷா மீது அம்பு - கமல் தூது!
......................................
’எந்திரன்’ இசை விழா - எதிர்பார்ப்பு எகுறுதுங்கோ!
......................................
கண்கள் பிடிச்சிருக்கு என்றார் கார்த்தி - காஜல்
......................................
பசுபதியிடம் கற்றுக்கொள்வேன் - ஆதி
......................................
வசந்தபாலனால் தமிழ் சினிமா வாழ்கிறது:சிவக்குமார்
......................................
கார்த்தி-தமன்னா காதலும் கல்யாணத்தில் முடியும்?
......................................
விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தின் முழுக்கதை
......................................
நான் கமல்ஹாசன் கிடையாது : விஜய் ஓப்பன் பேச்சு
......................................
கலைஞரை சந்திக்கிறார் ஜாக்கிசான்
......................................
கர்நாடகாவில் விஜய்-சூர்யா ஏற்றிய விளக்கு
......................................
அதிசயம்: ராஜாவின் வாரிசுடன் வைரமுத்து கூட்டணி
......................................
காலில் விழுந்த ஐஸ்: கண்கலங்கிய ரஜினி
......................................
அனுஷ்கா...அனுஷ்கா...- சிம்பு கனவு நிறைவேறியது
......................................
மிரட்ட வாராரு எந்திரன் - இயக்குநர் ஷங்கர்
......................................
அந்த படத்தின் தாக்கம்தான் மதராசபட்டினம்: விஜய்
......................................
அந்த காதலுக்காக தமிழ் கற்கப்போகிறேன்:எமிஜாக்சன்
......................................
காதலுக்காக மக்களை ஏமாற்ற சம்மதித்த நயன்தாரா
......................................
இணைந்த கைகள் - விஜய் விஸ்வரூபம்
......................................
அஜீத்-50’க்கு என்ன ஆச்சு?
......................................
எந்திரன் படத்தின் மிரட்டல் டிரைலர்
......................................
18ம் நூற்றாண்டின் அரவான் - வசந்தபாலன் படைப்பு
......................................
ரஜினிக்காக காத்திருக்கும் ஆனந்தபுரத்து வீடு
......................................
கமல் பேச்சை தட்ட முடியாத த்ரிஷா அம்மா
......................................
லட்சுமிராய்க்கு டோனி போட்ட கண்டிஷன்
......................................
அதிகமாக ஆசைப்பட்ட பிரகாஷ்ராஜ்...
......................................
நான் உயிருடன் இருக்கிறேன் - நமீதா
......................................
எம்எல்ஏவாக தயார்: கட்சியினர் அணுகலாம்: திலகன்
......................................
ஆஸ்கர் விருது தேர்வு கமிட்டியில் ஏ.ஆர். ரகுமான்
......................................
அம்மா வேடத்தில் நடிக்கவில்லை! சினேகா
......................................
இமயமும்,சிகரமும் ஆரி’க்கு போட்ட ரோடு
......................................
த்ரிஷா திருமணம் எப்போது? தாயார் பதில்!
......................................
அரசியல் & விஜய் பற்றி கேட்காதீர்கள்: சந்திரசேகர்
......................................
கல்யாணத்துக்கு ஓகே;கண்டிஷனுக்கு ஓகேவா?பூஜா
......................................
விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள்
......................................
இளையராஜா புகார்:குற்றப்பிரிவு போலீசார் அதிரடி
......................................
காதலில் விழுந்தேன்! -நடிகர் பிரேம்ஜி
......................................
ஜெய் படத்திற்கு கனிமொழி கொடுத்த அனுமதி
......................................
நித்யனந்தா - ரஞ்சிதா - கோபிகா! வெளிவராத வீடியோ
......................................
'புலி வேஷம்' கட்டும் சதா!
......................................
ரஞ்சிதா வாக்குமூலம் கொடுக்காதது ஏன்?
......................................
அஜீத்துக்கு நண்பன் விஜய்க்கு ரசிகன் :நடிகர் ஜெய்
......................................
மாட்டிக்கிட்டு முழிக்கிறோம்: அஜீத் பேட்டி
......................................
அஜீத் விவகாரம்: திருமாவளவன் என்ட்ரி
......................................
அஜீத் பேசியது சரியா? தவறா?
......................................
கமல் மகள் ஸ்ருதி- நடிகர் சித்தார்த் திருமணம்?
......................................
ஜெ.- ரஜினி திடீர் சந்திப்பு
......................................
தம்பி அஜீத் நல்ல பண்பாளர்: அசல் குஷியில் பிரபு
......................................
ஒப்பாரி லெட்சுமியம்மா:ஆவணப்படம்
......................................
எட்டாக்கனி அஜீத் - ஓர் ஆச்சரியம்
......................................
அம்மாவின் ஆவியுடன் பேசினேன்: நடிகை கனகா
......................................
ஜெயராம் மீதான வழக்கு: வழக்கறிஞர் பாலு பேட்டி
......................................
தமிழ் பெண்களை இழிவுபடுத்திய நடிகருக்கு கண்டனம்
......................................
சிம்பு - 26: நடிகர்-நடிகைகள் வாழ்த்து
......................................
சேரன்&மிஷ்கின் படத்தின் இசையமைப்பாளர் ’கே’ பேட்டி
......................................
கடவுள் இல்லை: பாலா பரபரப்பு பேட்டி
......................................
இசைஞானி, இசைப்புயலுக்கு பத்மபூஷன் விருது
......................................
நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ பட்டம்?
......................................
என் மீது விழுந்த முத்திரையை மாற்றுவேன்:பாலா பேட்டி
......................................
பாலாவுக்கு தேசிய விருது
......................................
கண்டனம் தெரிவித்த ரஜினிக்கு கண்டனம்
......................................
ரஜினியின் 2வது மருமகன்
......................................
விஜய் விவகாரம்: சன் டிவிக்கு வந்த தலைவலி
......................................
பத்திரிக்கையாளர்கள் ஆவேசம்: பயந்து ஓடிய விவேக்
......................................
விஜய் படத்துக்கு பிரபாகரன் சொன்ன டைட்டில்!
......................................
யாகம்,விருந்து,உசுப்பேத்தல்: ரஜினி ஃபார்மூலா
......................................
விஜயகாந்தின் கேப்டன் டி.வி.
......................................
ஈழம் - தமிழ் திரையுலகினர் ஆவேசம்
......................................
ஊதிவிட்ட விவேக்: பற்றி எரிந்த பத்திரிக்கையாளர்கள்
......................................
புதிய பாதையில் விஜய்-அஜீத்:பழையரூட்டில் ரஜினி-கமல்
......................................
சிங்களப்படத்தில் நான் நடிக்கவில்லை:சூர்யா மறுப்பு
......................................
ங்கொக்கா போட்டோ என்று திட்டிய விவேக்கின் கதி
......................................
அடி மேல் அடி: புதிய வில்லங்கத்தில் சிக்கிய விஜய்
......................................
வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்
......................................
கிழியும் விவேக் முகங்கள்:சா’தீ’ மூட்டல்!
......................................
இளமை இதோ..இதோ.. -:தோழிகளுடன் சோனா ஜல்சா
......................................
அது தவறான தகவல்:ரஜினி மறுப்பு
......................................
சூர்யா,விவேக் மீது சைதாபேட்டை கோர்ட்டில் வழக்கு
......................................
ஈனப்பசங்க என்று எல்லோரையும் திட்டவில்லை:சூர்யா
......................................
கமல்,விஜய்,அஜீத் புறக்கணிப்பு: ரஜினி வரவேற்பு
......................................
நடந்தது என்ன? நடிகைகளின் ஆவேசம் நியாயம்தானா?
......................................
தொட்டாலே தொத்திக்கும்: பார்த்திபன் கவிதை
......................................
கமல் நடிப்பை பார்த்துதான் முன்னேறினேன்:ரஜினி
......................................
கமல் திருவிழா: இந்திய நட்சத்திரங்கள் வாழ்த்து
......................................
எந்திரன் கதையை எங்கிருந்து சுட்டார்கள்
......................................
அரசியலில் குதிக்கிறார் ஆச்சி
......................................
ரூம் போட்டு யோசித்தேன்: நடிகர் விஜய்
......................................
காஞ்சிவரமும் தேசிய விருதுகளும்- ஒரு சிறப்பு பார்வை
......................................
விஜய் மாதிரி மனசு இருந்துட்டா நடிக்கவே வரமாட்டோம்
......................................
அரசியல் பற்றி இவனுக்கு என்ன தெரியும்...கமல் அதிரடி
......................................
ஏழ்மையும் என் ஏற்றங்களும்: நடிகர் சிவக்குமார்
......................................
காதலைவிட நட்பே சாகும்வரை இருக்கும்:சசிக்குமார்
......................................
நான் விரும்பிய பெண்ணுடன் இருக்க... கமல் அதிரடி
......................................
விக்ரம்-சேரன்: ’செம’ ஹாட் சிப்ஸ் - 2 கிராம்
......................................
ஆந்திராவை கலக்கும் எவர்கிரீன் சூப்பர்ஸ்டார் mgr
......................................
ரம்பாவை காதலிக்கிறேன்:இளைஞர் ரகளை
......................................
சினேகா விவகாரத்தில் சிக்கும் பெண் நடன இயக்குநர்
......................................
சினேகாவை எச்சரித்த சேரன்!
......................................
நமீதாவுக்கு சரத்குமார் போட்ட புகழ் மாலை
......................................
எனக்கும் துரோகம் செய்துவிடாதீர்கள்: கமல்
......................................
எந்த நடிகரும் எம்.ஜி.ஆர். ஆக முடியாது: சத்யராஜ்
......................................
அரை டவுசர் முதல் அரசர் வேடம் வரை: வடிவேலு பேட்டி
......................................
வைரமுத்துவின் திரைப்பாட்டு திருவிழா
......................................
மொட்டை போட்ட நடிகைகள்!
......................................
அப்துல்கலாம் விவகாரம்: மக்கள் மீது விவேக் ஆதங்கம்
......................................
பாக்யராஜ்-சிம்பு-அமீர்: சினிமாவில் சென்டிமென்ட்!
......................................
பிரபாகரன் மர்மத்தால் கிளிநொச்சியை கைவிட்ட அமீர்
......................................
ஜூனியர் கேரளத்து பைங்கிளி
......................................
ஹனிமூன் போயிட்டு வந்திருக்கும் குஷ்பு
......................................
அதிசயம்:இளையராஜாவும்-வைரமுத்துவும் இணைகிறார்கள்
......................................
அஜீத் ஆரம்பித்துள்ள 'இயக்கம் 1971'
......................................
நடனத்தின் எல்லை 'மைக்கேல் ஜாக்ஸன்' ஒரு சகாப்தம்!
......................................
எனக்கு 34 குழந்தைகள்: நடிகை பிரீத்தி ஜிந்தா
......................................
ஆஸ்கர் சிகரத்தில் வெற்றிக்கொடியேற்றிய ஏ.ஆர்.ரகுமா
......................................
ஜெனிலியா காதலுக்கு முன்னாள் முதல்வர் எதிர்ப்பு
......................................
நயன்தாரா சர்ச்சையின் முழுப் பின்னணி!
......................................
சிரிப்பு சிகரம் சரிந்துவிட்டது
......................................
தங்க மகன் ஏ.ஆர்.ரஹ்மான்!
......................................
வேகாத ஹீரோயிசங்கள், வெளிச்சமாகும் படைப்புகள்...
......................................
நமீதாவைத்தேடி மூனு கோடி...
......................................
அபிராமியுடன் காதலா? கவுதம்
......................................
நடிகர்களுடன் ஐ.டி. ஊழியர்கள் போராட்டம்
......................................
கணவர் கொடுத்த தைரியம்- குஷ்பு
......................................
ஹாலிவுட் அனுபவம் சூப்பர்! சினேகா
......................................
ரஜினி அரசியலுக்கு வரமாட்டார்
......................................



அதிசயம்:

இளையராஜாவின் வாரிசு வைரமுத்துவுடன் கூட்டணி


ளையராஜா-வைரமுத்து நட்பு உடைந்து போனதற்கு பல காரணங்கள் உண்டு.   அவற்றில் ஒன்றை மட்டும்தான் சொல்ல முடியும்.   மற்றவற்றை சொல்லி மீண்டும் பிரச்சனையை கிளப்பக்கூடாது என்பதால்தான் இந்த எச்சரிக்கை.

பாடல்களின் காப்பிரைட் உரிமையில் எழுந்த பிரச்சனை இவர்களின் பிரிவிற்கான காரணங்களில் ஒன்று.  

உடைந்து போன இவர்களின் நட்பை  ஒட்டவைப்பதற்கு எத்தனையோ பேர் முயற்சித்தார்கள்.  எத்தனையோ வருடங்களாயிற்று; எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.  இன்று வரை இவர்களை இணைப்பதற்கான முயற்சிகள் மட்டும் அவ்வப்போது நடந்துவருகின்றன.

இளையராஜா  மட்டுமல்ல;  அவரின்  வாரிசுகள் கூட வைரமுத்துவுடன் இணையாமல் இருந்தார்கள். அதனால்தான் நிறைய இயக்குநர்கள் வைரமுத்துவின் வரிகளுக்கு ஆசைப்பட்டும் அது நிறைவேறாமல் போனது.


நிறைய சந்தர்ப்பங்களில் ராஜாவுடன் இணைவதற்கு விரும்பியுள்ளார் வைரமுத்து.  ஆனால் ராஜா அதுக்கு இடம் கொடுக்கவேயில்லை.


வாரிசுகளுடனாவது இணைந்துவிட வேண்டும் என்று விரும்பினார் வைரமுத்து.



யுவன்சங்கர்ராஜா முன்னணிக்கு வந்த பிறகு நடந்த ஒரு பாடல் வெளியீட்டு விழாவில் யுவன்சங்கர்ராஜாவை வைரமுத்து புகழ்ந்து தள்ளினார்.  

‘’அன்று
ஒரு குழந்தை ரெம்ப கருப்பாக,  அவ்வளவாக அழகு இல்லாமல் இருந்தது.  அதனால்தானோ என்னவோ தெரியவில்லை. 

காரின் முன் சீட்டில்
உட்கார்ந்திருந்த நாங்கள் கையில் வைத்திருந்த அந்தக் குழந்தையை பின் சீட்டில் இருந்தவர்களிடம் கொடுத்துவிட்டோம்.


அன்று பின் சீட்டுக்கு அனுப்பப்பட்ட அந்தக் குழந்தை இன்று முன் சீட்டுக்கு வந்திருக்கிறது’’ என்று யுவனை ஏகத்துக்கும் புகழ்ந்தார்.  அப்படி இருந்தும்
யுவன் நேற்று வரை வைரமுத்துவுடன் இணையவே இல்லை.


இப்படிப்பட்ட சூழ்நிலையில் அதியசயத்திலும் அதிசயமாக ராஜா இசையில் வைரமுத்து மகன் மதன் கார்க்கி பாட்டெழுதுகிறார் என்று செய்தி வந்தது. 


பாடல் வந்ததா? வரவில்லையா? என்பதைவிட அப்படி ஒரு செய்தி வரும் அளவிற்கு முயற்சி நடந்ததே பெரிய விசயமாக இருந்தது இசை
ரசிகர்களுக்கு.



இந்நிலையில் வைரமுத்துவின் பிறந்த நாளான இன்று(13.07.2010) ஒரு தித்திப்பான செய்தி.  யுவன்சங்கர்ராஜா இசையில் வைரமுத்து பாட்டெழுதுகிறார்.   அஜீத் நடிக்கும் இப்படத்தை கங்கைஅமரன் மகன் வெங்கட்பிரபு இயக்குகிறார்.


மங்காத்தா என்ற அந்தப்படத்தில் நல்ல இசையாட்டம் ஆடப்போகிறார்கள்.  நல்வரவு.


-வடபழனிவாலு

---------------------------------------


ளையராஜாவை பிரிந்த பிறகு வைரமுத்து எழுதிய இந்த பிரிவுக்கடிதத்தை(இந்தக்குளத்தில் கல் எறிந்தவர்கள்) படித்தால் அவர்களின் நட்பும், பிரிவின் கனமும் புரியும்.   அவர்கள் இணைய மாட்டார்களா என்று தவிக்கும் ரசிகர்களின் தாகமும் புரியும்.


இசை ஞானியே!

என்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நீயும் இல்லை.
உன்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நானும் இல்லை.

என் இலக்கிய வாழ்க்கையின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கி வைத்தவனே! தூக்கி நிறுத்தியவனே!


உன்னை நினைக்கும் போதெல்லாம் என் மனசின் ஈரமான பக்கங்களே படபடக்கின்றன.

கொட்டையை எறிந்துவிட்டு, பேரீச்சம்பழத்தை மட்டுமே சுவைக்கும் குழந்தையைப்போல என் இதயத்தில் உன்னைப் பற்றிய இனிப்பான

நினைவுகளுக்கு மட்டுமே இடம் தந்திருக்கிறேன்.


மனைவியின் பிரிவுக்குப் பிறகு அவள் புடவையைத் தலைக்கு வைத்துப் படுத்திருக்கும் காதலுள்ள கணவனைப் போல அவ்வப்போது உன்

நினைவுகளோடு நான் நித்திரை கொள்கிறேன்.



திரை உலகில் நான் அதிக நேரம் செலவிட்டது உன்னிடம்தான்.

மனசில் மிச்சமில்லாமல் பேசிச் சிரித்தது உன்னோடுதான்.


பெண்களைத் தவிர என் கனவில் வரும் ஒரே ஆண் நீதான்.

நமக்குள் விளைந்த பேதம் ஏதோ நகம் கிழித்த கோடுதான்.


ஆனால் நான் கண்ணினும் மெல்லியவன்; நகத்தின் கிழிப்பை என் விழிப்பை தாங்காது.

பரணில் கிடக்கும் ஆர்மோனியம் எடுத்து, தூசு தட்டி, வாசிப்பது போல் உன் தூசுகளைத் துடைத்துவிட்டு உன்னை நான் ஆர்மோனியமாகவே

நேசிக்கிறேன்.

 

நீளமான வருடங்களின் நீண்ட இடைவெளியைப் பிறகு ராஜாஜி ஹாலில் எம்.ஜி.ஆர். இரங்கல் கூட்டத்தில் இருவரும் சந்தித்துக் கொள்கிறோம்.


என்னை நீ குறுகுறுவென்று பார்க்கிறாய்.

உன்னை நானும் பார்க்கிறேன்.

தூண்டிலில் சிக்கிய மீனாய்த் தொண்டையில் ஏதோ தவிக்கிறது.

வார்த்தை துடிக்கிறது;

வைராக்கியம் தடுக்கிறது;

வந்துவிட்டேன்.





அன்று... இரவெல்லாம் உன் ஞாபகக்கொசுக்கள் என்னைத் தூங்கவிடவில்லை.

உன்னோடு சேர்ந்த பின்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள் என்னில்.


ஒரே வருஷத்தில் சூரியனை என் பக்கம் திருப்பிச் சுள்ளென்று அடிக்க வைத்தாய்.

இந்த விதைக்குள் இருந்த விருட்சத்தை வெளியே கொண்டு வந்தாய்.


என் பெயரைக் காற்றுக்குச் சொல்லிக் கொடுத்தாய்.


நீதான்... அந்த நீதான் ஒரு நாள் எனக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பினாய்.

ஒரு கணம் திகைத்தேன்.


வெள்ளைத் தாமரையாய் இருந்த மனசு கார்பன் தாளாய்க் கறுத்தது.

பிறகு நிதானமாய் சிந்தித்தேன்.



நீ எனக்குச் செய்த நன்மைகள் மட்டுமே என் நினைவுக்கு வந்தன.

சினிமாக் கம்பெனிகளின் முகவரிகளே தெரியாத அந்த வெள்ளை நாட்களில் என்னை வீட்டுக்கு வந்து அழைத்துப் போவாயே! அதை நினைத்தேன்.



நான் கார் வாங்குகிற காலம் வரை உன் காரில் என்னை என் வீட்டில் இறக்கி விட்டுப் போவாயே! அதை நினைத்தேன்.


உன் வீட்டிலிருந்து உனக்காகக் காய்ச்சி அனுப்பப்படும் ஒரு கோப்பைப் பாலில் எனக்குப் பாதி கொடுக்காமல் எப்போதும் நீ அருந்தியதில்லையே! அதை

நினைத்தேன்.


‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ பாடல் பதிவாகி முடிந்ததும் என்னைப் பரவசத்தோடு தழுவிக்கொண்டு என் கன்னங்களை வருடிக்கொண்டு, அப்படியே

புகைப்படக்காரரைப் படமெடுக்கச் சொன்னாயே! அதை நினைத்தேன்.


அந்த நினைவுகளின் இதமான உஷ்ணத்தில் உன் வக்கீல் நோட்டீஸ் எரிந்து போனது.



எனக்கு எதிராக உன் பெயரில் ஓர் அறிக்கை வருகிறது.

இருக்காதே என்று நினைக்கிறேன்.

பிறகு நண்பர்களுக்குச் சொல்லி நகலைக் கைப்பற்றுகிறேன்.

உன் அறிக்கைதான்.


ஒரு பெண் வெட்கப்படுவது மாதிரி இருக்கும் உனது கையெழுத்தேதான்.

படித்தேன். சிரித்தேன். கிழித்தேன். வேறோரு கோணத்தில் நினைத்தேன்.


உன் எழுத்தில் இந்த உஷ்ணம் இருந்தால் உன் இருதய அடுப்பில் எத்தனை விறகு எரிந்திருக்கும்!

உன் உள்ள உலை எத்தனை முறை கொதித்திருக்கும்!

காரணமே இல்லையே.


இது இருதயத்திற்கு ஆகாதே.

 

நண்பர் கமல்ஹாசன் என்னை அழைத்து அவரது புதிய சரித்திரப் படத்துக்கு வசனம் எழுதச் சொல்கிறார். சந்தோஷத்தோடு ‘சரி’ என்கிறேன்.


ஆனால் லோக்சபையின் தீர்மானத்தை ராஜ்யசபா அடித்துவிடுவது மாதிரி நீ தடுத்து விடுகிறாய்.


இப்படியெல்லாம் அடிக்கடி நான் சிரித்துக்கொள்ள சந்தர்ப்பம் தருகிறாய்.

 

நான் எப்போதும் நேசிக்கும் இனியவனே!

இப்போது சொல்கிறேன்.


உனது பட்டறையில் எனக்கெதிராய் அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.

ஆனால் எனது யுத்தத் தொழிற்சாலையில் கவசங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறேன்.


ஏனென்றால், என்னை எதிரியாக நீ நினைக்கிறாயே தவிர உன்னை எதிரியாக நான் நினைக்கவில்லை.

 

உன்னை நான் பிரிந்தோ என்னை நீ பிரிந்தோ அல்லது பிரிக்கப்பட்டோ நாம் தனித்து நின்ற சமயம் உனக்கு வேண்டாதவர்கள் சிலர் என் வீட்டுக்கு வந்தார்கள்.


உனக்கெதிரான அவர்களின் கூட்டணிக்கு என்னைத் தலைமையேற்க சொன்னார்கள்.

நான் கொதித்தேன்.


"அவன் சிங்கம். நானும் சிங்கம். சிங்கத்துக்கும் சிங்கத்திற்குமே யுத்தம். நரிகளின் கூட்டணியோடு சிங்கங்கள் போர்க்களம் புகுவதில்லை" என்று சீறிச்

சினந்து "போய் வாருங்கள்" என்றேன்.


மறுகணம் யோசித்து, வார்த்தைகளில் பாதியை வாபஸ் வாங்கிக்கொண்டு, "போங்கள்" என்றேன்.

நீ வீழ்ந்தாலும் - வீழ்த்தப்பட்டாலும் எனக்கு சம்மதமில்லை.


இவ்வளவு உயரத்தில் ஏறியிருக்கும் ஒரு தமிழன் உருண்டு விடக்கூடாது.



நீயும் நானும் சேர வேண்டுமாம்.

சில தூய இதயங்கள் சொல்லுகின்றன.

உனக்கு ஞாபகமிருக்கிறதா?


‘ஈரமான ரோஜாவே’ எழுதி முடித்துவிட்டு ஆழியாறு அணையின் மீது நடந்து கொண்டிருந்தோம். திடீரென்று என்னை நீ துரத்தினாய்; நான் ஓடினேன். நீ

துரத்திக்கொண்டேயிருந்தாய்; நான் ஓடிக்கொண்டேயிருந்தேன்.


மழை வந்தது.

நின்று விட்டேன்.


என்னை நீ பிடித்து விட்டாய்.

அப்போது சேர்ந்து விட்டோம்.


ஏனென்றால் இருவரும் ஒரே திசையில் ஓடிக் கொண்டிருந்தோம்.

இப்போது முடியுமா?


இருவரும் வேறு வேறு திசையில் அல்லவா ஓடிக்கொண்டிருக்கிறோம்?

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(16)
Name : Subbaraman R Country : Germany Date :8/27/2010 10:41:10 PM
மனதுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. மறப்போம் மன்னிப்போம் என இருவரும் இணையும் நாள் விரைவில் வர பிரார்த்தனை செய்வோம் !!!
Name : vetri Country : Denmark Date :8/16/2010 2:15:00 PM
இசையில் உச்சம் ராஜா,கர்வத்திலும் மகா உச்சம்.டி எம் எஸ் குரலையே வேண்டாமென்றவர் மற்றவரை மதிப்பாரா. வாழ்க வைரமுத்து வாழ்க இளையராசு.
Name : s.gopu Country : Australia Date :8/16/2010 12:05:47 AM
வைரமுத்து நீ அன்பை சுமந்து நண்பனை தேடுகிறாய்..! இளையராஜா நீ இதயத்தில் நண்பனை வைத்து கவிஞனை தேடுகிறாய் சேர்ந்துபார் வறண்ட பூமியில் புதிய பூ இசையால் கவிதையாய் இணைந்து மலரும். .!. இது ஆதங்கத்தின் விசும்பல்... செல்ல கோபு. மைசூர்.
Name : mariyppaa Country : Denmark Date :8/2/2010 9:00:11 PM
சோத்துக்கு டிங்கிரி அடித்த காலத்தில் கர்வமில்லை பணக்கட்டுகள் நிறைந்ததனால் குணக்கட்டுக்கள் சிதறின பின் புலம்புவதில் பயனில்லை.
Name : P. Varadharajan Country : India Date :7/16/2010 8:12:24 PM
என் போன்ற ஒரு சிலருக்கு இது ஒரு புதுமையான ஆனால் அதிர்ச்சியான தகவலாகும். எனினும் திரு. வைரமுத்து அவர்கள் தன் கடந்த்த கால உள்ள பதிவுகளை கவிதை வரிகளாய் வடித்து இருப்பது அருமை. நட்பின் ஆழத்தையும் , அர்த்தத்தையும் இதைவிட மேலாக யாரும் சொல்ல முடியாது. அவர்கள் நட்பு புதுப்பிக்கப்பட்டு புத்துயிர்பெற மனதார விரும்புகிறேன்.
Name : pillai Country : Canada Date :7/16/2010 1:08:14 PM
ஒருவரிடம் ..வாத்திய காரர் பின்நாளில் பின்நாளில் அவர் ( இசை அமைப்பாளர் ) மகன் தன்னிடம் வேலை பார்த்து ஆஸ்கார் வென்றார் இசை அமைப்பாளர் மகன் தன்னிடம் வரும்போது கிபோர்ட் "வாசிக்க தெரியாது" என்ற "பெரியஜானி " அல்லவா..இந்த ராஜா ! நாமும் நம்பினோம் ! இறைவனை நம்பும் குடும்பம் வாய் திறக்கவில்லை ! பின்நாளில் சிறுவயது "போடோக்கள்" அம்பலமாகின !சிறுவனின் "இசை திறமை! உலகம் வியக்கும்" MANN "RRRRRR KUUUUUU MAAAAN
Name : kalaivanan Country : Qatar Date :7/15/2010 10:37:22 PM
உனது பட்டறையில் எனக்கெதிராய் அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.............. ஆனால் எனது யுத்தத் தொழிற்சாலையில் கவசங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறேன்...................... அருமை யான வரிகள் ....................... இந்த இளையராஜா பற்றி அனைவருக்கும் தெரியும் கெட்ட குணம் கொண்டவர் அது மட்டும் இல்லாமல் முரட்டு குணமும் ...... ஒழிந்து போவது உறுதி ..
Name : Thameez Country : United Arab Emirates Date :7/14/2010 7:02:00 PM
நானும் பார்த்து ஆச்சிரிய பட்டது தான். விரிவான செய்திகள் பினால் வரும் என்று நம்பலாம். இதுல வெங்கட் பிரபுவுக்கும் சம்பந்தம் இருக்கும் என்று எண்ணுகிறேன். நீங்கள் வைரமுத்துவின் வைர வரிகளை சேர்த்து இருக்குறீர்கள் ஆனால் யாரோ ஒருவர் (பெயர் நினைவில்லை) வைர முத்துவை கிழி கிழி என கிழித்தார். ராசாவை தூக்கி தலைல வைத்தார். வைரமுத்துகூட பருத்திவீரனுக்கு பாட்டு எழுதாததை வருத்ததுடன் சொல்லி இருக்கிறார்.
Name : Ravi Country : India Date :7/14/2010 11:58:06 AM
Very nice letter. I may not write the following exactly but the message is- Some time back Dr Karunanithi had said: He really lacks the friendship with opposition leaders just because they are opposite leaders. But he used to be very friendly with Dr MGR even though they were from opposite parties. But here the culture of Dr Vairamuthu is so beautiful to relish! Whether Ilayaraja and Vairamuthu again become friends or not is secondary issue to me. But we must learn the culture.
Name : k.theepan Date :7/14/2010 12:15:31 AM
இனிய‌ இசைக்குச் சிறந்த வரிகள் கிடைக்க வேண்டுமா? சிறந்த வரிகளுக்கு இனிய இசை கிடைக்க வேண்டுமா? இருவரும் இணையவேண்டும். நல்ல தமிழ்ப் பாடல்கள் காதில் தேனாய் பாயவேண்டும்! தீபன்
Name : rafe.dubai Country : United Arab Emirates Date :7/13/2010 10:26:10 PM
சூப்பர் லட்டர், கிரேட் வைரமுத்து உங்கள் நட்பு சேர பிரதிக்கேரன் உங்கலகுக அல்ல உண்மையான நட்புக்கு
Name : sakthy Date :7/13/2010 10:09:16 PM
எந்த இளகிய வீர கவிதை வசனம் எழுதினாலும் இரண்டு பக்கமும் இருக்கும் நீதியை அறியாது கருத்து சொல்வது நடுநிலை தவறுவதாகும். no comments
Name : elango Country : Kuwait Date :7/13/2010 9:18:54 PM
நற்பு என்றால் அது இதுதான்
Name : john peter Country : Bahrain Date :7/13/2010 9:01:49 PM
Really a very sensitive friendship broken. What everbody wish should happen, Ilayaraja and Vairamuthu must become friends again.
Name : shakthivel Country : India Date :7/13/2010 8:16:13 PM
நீங்கள் ஒன்று செரவேன்ன்டு " உலகில் உள்ள கடவுள்களுக்கெல்லாம் நன்றி சொல்வேன்" சேரும் வரை சொல்லிகொன்டிருப்பேன் " கேட்டுகொண்டிருப்பேன் கடவுளிடம்"""" உணர்வுகள் துடிக்கின்றது உங்கள் இசையில்"உங்கள் வரியில்"உள்ளம் மகிழ"உலகம் நெகிழ" உயிரும் உருக" நீங்கள் இணையவேண்டும் இசை மகனே வரி மகனே வாருங்கள் இனைந்து" வாழ்வோம் நங்கள் மகிழ்ந்து" காத்திருக்கும் ஒரு இசை காதலனின் ஏக்கம்" நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் செவிகளில் ஒலிகளை ஏற்றிகொண்டிருப்பேன்" ராஜவைரம்"வைரராஜ"வரும் வரை ஓயமாட்டேன்" எதிர் பார்ப்புடன்"சக்திவேல்"
Name : sakthikkanal Country : Australia Date :7/13/2010 7:16:25 PM
இது வைரமுத்துவின் மிகச்சிறந்த கவிதை .வாழ்க !