மிரட்ட வாராரு எந்திரன் - இயக்குனர் சங்கர்
“ஆனந்தபுரத்து வீடு” சங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரித்து உள்ள படம். மர்மதேசம், ஜென்மம் எக்ஸ், போன்ற மர்மத்தொடர்களின் இயக்குனர் நாகா இந்தப் படத்தை இயக்கி உள்ளார். நந்தா-சாயாசிங் நடித்துள்ள திகில் படம் இது.
‘வெயில்’ படம் தொடங்கி, இதுவரை சங்கரின் எஸ் பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரித்த அத்தனை படங்களுமே ஹிட் படங்கள் தான்.
மிகப்பிரமாண்டமான படங்களையே இயக்கும் சங்கர், தானே இயக்கி தாயாரித்த ‘முதல்வன்’ படத்தைத் தவிர, அவர் தயாரித்த அத்தனைப் படங்களுமே சின்னப் பட்ஜெட் படங்கள் தான். ஆனால், அவை எல்லாமே, பிரமாண்டமான வெற்றியினை தந்துள்ளன.
இவ்வாறான, பிரமாண்டப் புகழ் இயக்குனர் சங்கரிடம் சின்னதாய் சில கேள்விகள்...
இது வரை, நீங்கள் தயாரித்த அத்தனைப் படங்களுக்கும் சிறப்பான விளம்பரங்கள் செய்துள்ள மாதிரி... ஆனந்தபுரத்து வீட்டிற்கு, அந்த அளவிற்கு விளம்பரம் இல்லையே ஏன்?... மர்மப் படம் என்பதால்... மர்மமாய் வெளியிட்டுள்ளீரா...?
அப்படி... எல்லாம் ஒன்றும் இல்லை. மத்தப்படங்களைப் போல், இதற்கும் தேவையான விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்தப் படத்திற்கு இசை வெளியீடு மட்டும் செய்யல. இதில், ரெண்டே பாட்டுத் தான் உள்ளன. அந்தப் பாடல்களும் கதையோடு பயணிக்கின்றன். படம் திகில் படம்... பாட்ட வெளியிட்ட.. பிறகு எப்படி திகில் இருக்கும். அதான். படம், திகில் படமுன்னாலும், பெண்கள், குழந்தைகள் எல்லோரும் குடும்பத்தோட பார்க்க கூடிய வகையிலானது தான். விருவிருப்பான திருப்பங்களோட படத்த எடுத்திருக்காங்க... எல்லோரும் ரசிச்சு பாக்கலாம்.
‘ஈரம்’ படத்திற்கு பின்... மீண்டும் திகில் படமான ஆனந்தபுரத்து வீடு...என்ன சங்கதி...? இந்தப் படத்தோட கதைய, இயக்குனர் நாகா சொன்ன போது, எனக்கு பிடித்திருந்தது. மேலும், அவர் திகிலான மர்மக் கதைகளுக்கு பிரபலமானவர் வேற... அதான் பயமில்லாமல் தயாரிக்க சம்மதித்தேன்.
அப்புறம், முக்கியமான ஒண்ணு...!
என்னாது... எந்திரனப் பற்றித்தானே... (வேற... இவ்வளவு தூரம் வந்தும், “எந்திரன” தொடலைன்னா... எப்புடி)எந்திரன் இப்ப, ‘போஸ்ட் புரடக்ஷன்’ பணிகள இருக்கு... கூடிய விரைவில் இசை வெளியீடு நடக்க ஆயத்தமா இருக்கோம்...
எந்திரன்.. பற்றி இன்னும்... ?
சீக்கிரமே... திரையில் மிரட்ட வராரு... அப்ப நீங்களாகவே...
ம்ம்... வேற என்னா பண்ணுறது... காத்திருக்க வேண்டியது தான்...!