அஜீத்-50’க்கு என்ன ஆச்சு?
ஐம்பதாவது படத்தை வரலாறு மாதிரி வெற்றிப்படமாக அதே நேரத்தில் எல்லோருக்கும் பிடிக்கும் படமாக கொடுக்க வேண்டும் என்று நினைத்த அஜீத் கே.எஸ்.ரவிகுமாரிடம் பேசி வந்தார். ஆனால் அவர் கமல் படத்துக்கு போய்விட்டதால் அங்கிருந்து திரும்பி வர லேட்டாகும் என்று தெரிந்ததும், கவுதம் மேனன் பக்கம் வந்தார்.
கவுதம்மேனன் வந்து நின்ற போது அஜீத் வில்லங்கத்தை நல்ல விலைக்கு வாங்கிக்கொண்டார். மிரட்டுகிறார்கள் என்று வாயை விட்டு...ஏண்டா வாயை விட்டோம் என்று நொந்துவிட்டார். அந்த நேரத்தில் டென்ஷனாகி சினிமாவே வேண்டாம் என்று கார் சீட்டில் உட்கார்ந்து ரேசுக்கு தயாராகிவிட்டார்.
அவரை புக் செய்திருந்த தயாநிதி அழகிரி எப்போ ஆரம்பிக்கலாம் படத்தை என்று கேட்க, ஆமால்ல....என்று யோசித்தவர் கவுதமிடம் பேசியிருக்கிறார். அவர் அப்போது விண்ணைத்தாண்டி வருவாயா என்று கேட்டுக்கொண்டிருந்ததால் சரியான பதில் இல்லையாம்.
அதன்பிறகு வெங்கட்பிரபுவிடம் கதை கேட்டிருக்கிறார் அஜீத். ஹாலிவுட்டிலிருந்து சுட்டதுதான் என்றாலும் இன்னும் கொஞ்சம் நல்லா சுடுங்க என்று சொல்லியிருக்கிறார்.
அவர் இன்னும் நல்லா சுடவில்லையோ என்னவோ. அவர்தான் இயக்குநர் என்று முடிவு செய்யவில்லை.
சிங்கம் நல்லா ஓடுவதைப்பார்த்து ஹரி மீது கண் வைத்திருக்கிறார். கே.எஸ்.ரவிக்குமாரின் வெற்றிடத்தை இவர் நிரப்புவார் என்று நம்புகிறாராம். சரணிடம் ஹரி உதவி இயக்குநராக இருக்கும் போதே அஜீத் அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால் இருவரும் இணைவதற்கு இதுவரை சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
ஹரியும் அஜீத்தின் 50க்கு ஆசைப்படுகிறாராம். ஆனால் ஒத்துக்கொண்ட படங்கள் குறுக்கிடுகின்றன. தனக்கு செய்த கிரீடம் சரியாக அமையாவிட்டாலும் மதராசபட்டணம் எல்லோரின் கவனத்தையும் திருப்பியிருப்பதால் அவரின் பக்கமும் திரும்பியிருக்கிறார்.
அதே நேரத்தில் கொள்கையை கொஞ்சம் விட்டுக்கொடுத்துவிட்டு புது இயக்குநர் பக்கம் திரும்பலாம் என்றும் முடிவெடுத்திருக்கிறாராம்.
விஜய் 53 க்கு போய்விட்டார். ஆனால் அஜித் இன்னமும் 50 க்கே வாரததற்கு காரணம்...அம்பதில் எப்படியும் செஞ்சுரி அடிக்க வேண்டும் என்பதால்தான் இத்தனை நிதானமாம். -வடபழனிவாலு