அண்மைச் செய்திகள்
புதுக்கோட்டை விபத்து ; சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு மாணவன் உயிரிழப்பு || சேலம் : கொலை வழக்கில் 11 பேருக்கு ஆயுள் || 17 குழந்தைகளை கற்பழித்த காமுகனுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு || 8 மாணவர்கள் பலி : பொதுமக்கள் சாலைமறியல் || பாஜகவில் குடுமிபிடி சண்டை; காங்கிரஸில் பெருந்தன்மை: நாராயணசாமி பேட்டி || கார் பருவ சாகுபடிக்கு 7 அணைகளில் இருந்து நாளை தண்ணீர் || டெல்லியில் தொடங்கிய சீன படவிழாவில் ஜாக்கிசான் || சோனியாவை சந்தித்தார் டி.ஆர்.பாலு : கனிமொழியை ஆதரிக்க கோரிக்கை || கனிமொழிக்கு மமக ஆதரவு : கலைஞரிடம் உறுதி || புதிய தலைமுறையில் விடிய விடிய ரெய்டு : இன்று தொடர்கிறது ரெய்டு || நெல்லையில் கார் மோதி சிறப்பு எஸ்.ஐ. பலி || இயக்குநர் மணிரத்னம் குடோன் தீப்பிடித்து எரிந்து நாசம் || கும்பகோணம் : பணத்தகராறில் ரவுடி வெட்டிக் கொலை ||
வெள்ளிக்கிழமை, 3, ஆகஸ்ட் 2012
குழந்தை நரபலி வழக்கு : கணவன் - மனைவிக்கு இரட்டை ஆயுள்
......................................
ரஜினி பஞ்ச் டயலாக் : அத்வானி பாராட்டு
......................................
2 ஜி அலைக்கற்றையின் அடிப்படை : அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
......................................
அத்வானி, மோடியுடன் மோதல் இல்லை : கட்காரி
......................................
இந்தியாவுக்கு 2வது பதக்கம்
......................................
ஹாக்கியில் இந்தியா தோல்வி
......................................
காவலாளி வீட்டில் 15 பவுன் நகை கொள்ளை
......................................
ஊருக்குள் புகுந்த சிங்கவால் குரங்கு
......................................
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஈஸ்வரப்பா
......................................
தமிழகம் முழுவதும் அதிரடி ரெய்டு : போலி டாக்டர்கள் சிக்கினர்
......................................
தேர்தலில் போட்டியிட மாட்டேன் : ஹசாரே
......................................
தமிழகத்தில் உடனடியாக மதுக்கடையை மூட வேண்டும் ; திருமாவளவன்
......................................
கும்பகோணம் பள்ளி தீவிபத்து வழக்கை விரைவில் முடிக்க உத்தரவு
......................................
விருகம்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் மர்ம தீ
......................................
கைலாய மலையில் ரஞ்சிதாவுடன் நித்தி : மதுரை ஆதினம் புலம்பல்
......................................
ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சன் திடீர் மாயம்: 5 மணி நேரத்துக்குப்பின் மீட்கப்பட்டார்
......................................
காமன்வெல்த் ஒப்பந்தம் ஒளிவு மறைவின்றி நடந்தது: வழக்கறிஞர் வாதம்
......................................
ஒரே நாளில் 77 தலைமை ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்
......................................
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் தீ விபத்து: மேலும் ஒருவர் உயிரிழப்பு
......................................
ஒலிம்பிக்: சாய்னா நெய்வால் தோல்வி
......................................
சென்னை: அதிக அளவில் பள்ளி குழந்தைகளை ஏற்றிய 80 வாகனங்கள் உரிமம ரத்து
......................................
தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன்: ரத்தம் வழிந்தோடியபடி 50 பேர் ம.மனையில் அனுமதி
......................................
ஹசாரே அறிவிப்பு அவரது பதவி ஆசையை வெளிப்படுத்துகிறது: ஜி.கே.வாசன்
......................................
கூலி பிரிப்பதில் தகராறு: இளைஞர் அடித்து கொலை
......................................
பார், ஓட்டல்களில் கேமரா பொருத்த உத்தரவு
......................................
அம்மன் சிலையை கடத்திய மூவர் கைது
......................................
பருவ மழை 15% குறைவு: வானிலை ஆய்வு மையம்
......................................
மத்திய அமைச்சர் வீட்டில் கல்வீச்சு
......................................
ஹசாரே குழுவினர் கட்சி தொடங்கினால் ஆதரப்பீர்களா? பாஜக பதில்
......................................
தீவிர கண்காணிப்பில் ஒலிம்பிக் பயிற்சியாளர்கள்
......................................
மதுரை: 2வது நாளாக கிரானைட் குவாரிகளில் சோதனை
......................................
டெசோ மாநாடு: திமுக வழக்கறிர்களுக்கு அழைப்பு
......................................
அணு உலை விபத்து இழப்பீடு வழங்க ரஷியா மறுப்பு: அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் கண்டனம்
......................................
காங்கிரசை தோற்கடிக்க வேண்டும்: சீமான்
......................................
உணவு கட்டுப்பாடு விதி தடை நீக்கம்: சென்னை ஐகோர்ட்
......................................
சூரியனைச் சுற்றி பிரம்மாண்ட கருவளையம்
......................................
விபத்து ஏற்பட்டால் இழப்பீடு வழங்குவது யார்? கூடங்குளம் பற்றி பிரதமர் கேள்வி!
......................................
ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சுதர்சன் கண்டுபிடிக்கப்பட்டார்! விரைந்தது போலீஸ்!
......................................
கருணை காட்டியிருந்தால் 6 உயிர்களை காப்பாற்றியிருக்கலாம்: உச்ச நீதிமன்றம்
......................................
பெண் பேராசிரியர்களை கேலி செய்வதை கண்டித்து மாணவர்கள் போராட்டடம்
......................................
ரூ.15,000 லஞ்சம்: போலீஸ் அதிகாரி கைது
......................................
ன்னாள் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கே.எஸ். சுதர்சன் காணவில்லை?
......................................
அனைத்து பள்ளிகளிலும் ஆங்கிலவழி கல்வியை ரத்து செய்ய வேண்டும்: தமிழறிஞர்கள் கூட்டமைப்பு
......................................
ஆற்றுக்குள் தவறி விழுந்த குட்டி யானை: 7 மணி நேர போராட்டத்திற்கு பின் தாய் யானையிடம் ஒப்படைப்பு
......................................
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்தை நீக்கவேண்டும்: ராமதாஸ்
......................................
கார்-பைக் மோதி 2 பேர் பலி
......................................
லாரி மீது கார் மோதி விபத்து: 3 மாணவர்கள் பலி
......................................
கும்பகோணம் பள்ளி தீ விபத்து: 6 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
......................................
போலி மருத்துவர்கள் 2 பேர் கைது
......................................
பொள்ளாச்சி அருகே 18 பவுன் நகை கொள்ளை
......................................
பஸ் ஓட்டலுக்குள் புகுந்தது விபத்து: 2 பேர் பலி
......................................
20 பதக்கங்கள்: பெல்ப்ஸ் சாதனை
......................................
இலங்கை ராணுவ வீரர்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவது 100 சதவீதம் உறுதி: முத்தாலிக் பேட்டி
......................................
தவறு செய்து விட்டேன்: பிரபல நடிகர் வருத்தம்
......................................
பேரக்குழந்தைகளின் கேள்விகு பதில் அளிக்க முடியவில்லை: தகுந்த ஆசிரியர்கள் தேவை: எடியூரப்பா
......................................
போதையில் ரகளை: படகுப் போட்டி வீரர் கைது
......................................
எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் புகை: பயணிகள் அச்சம்
......................................
கோபப்படுவது தான் என் ஸ்டைல். லஞ்சம் வாங்குவது உங்கள் ஸ்டைல்: விஜயகாந்த் பேச்சு
......................................
குடிக்கக் கூடாது என காதல் மனைவி கண்டிப்பு: கணவன் தற்கொலை
......................................
ஓய்வு பெற்ற பிறகும் லஞ்சம் வாங்கிய வணிகவரி அதிகாரி சென்னையில் கைது
......................................
சப்-இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கிய காட்சி பதிவு: நடவடிக்கை எடுக்குமாறு சி.டி.யுடன் கோர்ட்டில் மனு
......................................
வறட்சி பாதித்த மாநிலங்களுக்கு நிதி உதவி குறித்து 7ஆம் தேதி முடிவு: சரத்பவார்
......................................
மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக அவை முன்னவரை அறிவிக்கிறது காங்கிரஸ்?
......................................
அனைத்து கட்சி கூட்டம்! மீரா குமார் அழைப்பு!
......................................
பெண்ணுடன் நடனம்! நீதிபதி ராஜினாமா!
......................................
மலையாள நடிகர் திலகன் ஆஸ்பத்திரியில் அனுமதி
......................................
ஆக்கி தேசிய விளையாட்டா? 10 வயது சிறுமியின் கேள்விக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் விளக்கம்!
......................................
கலப்பு இரட்டையரில் பெயஸ்-சானியா ஜோடி வெற்றி
......................................
விஜயகாந்த் பத்திரிக்கையாளார் சந்திப்பு
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 3, ஆகஸ்ட் 2012 (11:53 IST)




அனைத்து பள்ளிகளிலும் ஆங்கிலவழி கல்வியை ரத்து செய்ய வேண்டும்: தமிழறிஞர்கள் கூட்டமைப்பு


 

சென்னையில் தமிழறிஞர்கள் கூட்டமைப்பு சார்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர்கள் பொன்னவைக்கோ, முத்துக்குமரன் மற்றும் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உள்பட பல தமிழறிஞர்கள் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.
 
அப்போது தமிழறிஞர்கள் கூட்டமைப்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து குமரிஅனந்தன் கூறியதாவது:- 
 
இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து பள்ளிக்கல்வி மொழியாக தமிழ் விளங்கிவருகிறது. 1954-ம் ஆண்டு காமராஜர் ஆட்சி காலத்தில் அப்போதைய தமிழக கல்வித்துறை அமைச்சர் சி.சுப்பிரமணியன் தலைமையில் கல்வித்துறை சீரமைப்பு குழு ஏற்படுத்தப்பட்டது. இது சட்டத்துறை, பொறியியல் துறை, மருத்துவத்துறை போன்ற துறைகளில் உள்ள ஆங்கில வார்த்தைகளுக்கு நிகரான தமிழ் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன.
 

இதற்கான கலைக்களஞ்சியத்தை இந்தியாவிலேயே முதன்முதலாக அன்றைய தமிழக அரசு வெளியிட்டது. இது தவிர கட்சி எல்லைகளையும் தாண்டி அண்ணா, நெடுஞ்செழியன், பா.ஜீவானந்தம், மீனாட்சி சுந்தரனார் மற்றும் நாராயணசாமி பிள்ளை போன்ற தமிழ் வல்லுனர்கள் கொண்ட குழுவை நியமித்து ஆங்கில வார்த்தைகள் அனைத்தும் தமிழ்ப்படுத்தப்பட்டன.
 
ஆங்கிலத்தில் நடத்தப்பட்டு வந்த அகில இந்திய தேர்வுகளை தமிழில் நடத்தும் அனுமதியை காமராஜர் அன்றைய பிரதமர் நேருவிடம் பேசி பெற்று தந்தார். இவ்வாறு அன்றைய ஆட்சியாளர்கள் அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் தமிழ்மொழி வழியிலான கல்வியை ஊக்குவித்து வந்தனர்.   அப்போது ஆங்கில வழிக்கல்வி சில தனியார் பள்ளிக்கூடங்களில் மட்டுமே போதிக்கப்பட்டு வந்தது.
 
பின்னர் சிறிது சிறிதாக இவை தமிழகத்தில் புற்றீசல் போல வளர்ந்தது. தற்போது தமிழக அரசே தாம் நடத்தும் தொடக்கப்பள்ளிகளில் பலவற்றை தேர்ந்தெடுத்து ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஆங்கில வழியில் கல்வி கற்பிக்க முடிவு எடுத்து ஆணை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் இதுவரை தனியார் பள்ளிகளில் மட்டுமே பயிற்று மொழியாக இருந்த ஆங்கிலம் தற்போது அரசு பள்ளிகூடங்களிலும் பயிற்று மொழியாக கற்பிக்கப்பட்டு வருகிறது.
 

அரசின் இந்த செயல் ஆங்கிலவழிக் கல்வியை வலிமைப்படுத்தி தமிழ்நாட்டில் தமிழ்மொழிக்கு இடமே இல்லாமல் செய்து விடும். எனவே தமிழ்வழிக் கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக அரசு, அறிஞர் குழுக்களை அமைத்தும், பல்கலைக்கழகங்களின் கருத்துரைகளைப் பெற்றும், கருத்தரங்குகள் நடத்தியும், சட்டப்பேரவையில் விவாதித்தும் சிறந்ததொரு முடிவை எடுத்து தமிழ்மொழி நிலைக்க வழிகாண வேண்டும்.
 
அரசு பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளிலும் ஆங்கிலம் வழியாக கல்வி கற்பதையும், கற்பிப்பதையும் உடனடியாக ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.
 
இவ்வாறு தமிழறிஞர் கூட்டமைப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக குமரி அனந்தன் கூறினார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(14)
Name : jebasingh Date :8/6/2012 11:51:47 AM
இது முட்டாள்களின் முடிவு. தமிழ் மட்டும் படித்தால் தமிழ் நாட்டில் மட்டும் தான் குப்பை கொட்ட முடியும். அதுவும் ஆங்கில அறிவு இல்லை என்றால் தமிழ் நாட்டிலும் ஒருசில தனியார் வேலை கிடைப்பதே அரிது. அதுவும் வெளி மாநிலத்திலோ, வெளி நாட்டிலோ சென்று வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை வந்தால் தமிழை மட்டும் வைத்து ஒன்றும் கிளிக்கமுடியாது. தமிழ் நாட்டில் ஹிந்தியும், இங்கிலீஷ் யும் கட்டாயம் படிக்கவைக்க வேணும். இந்த மாதிரி பிற்போக்கான அறிவு ஜீவிகலால்தான் மலையாளி மேல போகிறான். தமிழன் கீழ போகிறான்.
Name : raman Country : Australia Date :8/5/2012 2:04:24 AM
tamil is waste
Name : eelavan Country : Denmark Date :8/4/2012 4:03:28 AM
வசதியும் வாழ்வும் தராது என்று நம் தமிழ் மொழியை அழியாவிடலாமா? நாமனைவரும் வெள்ளைக்காரர்கள் ஆகி நம் பெண்கள் கடற்கரையில் நிர்வாணமாக சூரிய குளியல் எடுப்பதை வரவேற்கின்றீர்களா?பணம் காசு வேண்டும் என்பதற்காய் பெற்ற தாயை கொல்லலாமா?சம்பலும் சோறும் சாப்பிட்டாலும் வாய்கிழிய தமிழில் பேசி வய்ல்க்கரையிலும் கடல்க்கரையிலும் சுற்றித்தேரிந்து நம் காற்று நம்மில் படுவதுபோல் சுகம் உண்டா வெளிநாட்டு பனிக்குளிரில் சூடு கிடைக்க மதுவிடுதிக்குள் நுழைந்து மது குடித்து புகைபிடித்து ஓரக்கண்ணால் அரைநிர்வாண வெள்ளைக்காரியை கண்ணால் மேயும் கயமை பின் மாட்டுக்கறி சாப்பாடு எது நல்லது என்று அவரவர் முடிவெடுக்கட்டும்.
Name : vijay Date :8/4/2012 12:27:23 AM
தமிழ் படிச்சதும் வேலை நீ குடுப்பியா ?
Name : maa.periasamy Country : Australia Date :8/3/2012 9:06:27 PM
தமிழ்ப் பற்று இருப்பதில் தவறு இல்லை.தமிழை வளர்க்கக் தளராது உழைப்போம்..அதற்கக்காக நமது வருங்கால சந்ததியரை குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டச் சொல்வது சற்றும் சரியல்ல.
Name : subramani Country : Australia Date :8/3/2012 5:52:14 PM
'' அரசு பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளிலும் ஆங்கிலம் வழியாக கல்வி கற்பதையும், கற்பிப்பதையும் உடனடியாக ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட வேண்டும்'' என்ற கருத்தை ஒவ்வொரு தமிழனும் வரவேற்கிறோம்.தமிழறிஞர் கூட்டமைப்பை பாராட்டுகிறோம்.வாழ்க தமிழ்.வளர்க தமிழ்.
Name : subramani Country : Australia Date :8/3/2012 5:50:09 PM
'' அரசு பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளிலும் ஆங்கிலம் வழியாக கல்வி கற்பதையும், கற்பிப்பதையும் உடனடியாக ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட வேண்டும்'' என்ற கருத்தை ஒவ்வொரு தமிழனும் வரவேற்கிறோம்.தமிழறிஞர் கூட்டமைப்பை பாராட்டுகிறோம்.வாழ்க தமிழ்.வளர்க தமிழ்.
Name : Natarajan Country : United States Date :8/3/2012 5:25:27 PM
ஈழத் தமிழர்கள் மருத்துவப் பட்டப் படிப்பைக் கூட தமிழ் வழியில் கற்று மேல் நாடுகளில் சிறந்த மருத்துவர்களாக விளங்குகின்றனர்.அவர்கள் ஆங்கிலமும் சிறப்பாக கற்றுள்ளனர். தாய் மொழியில் அறிவியல் மற்றும் தொழில் கல்விகள் கற்றால் மண்டையில் ஏறும். ஆங்கிலம் தாய் மொழி இல்லாதவர்களுக்கு அவரவர் தாய் மொழியில் காற்றால் நன்றாகக் கற்கலாம். அதே நேரத்தில் நாம் ஆங்கிலத்தை ஒரு மொழிப் பாடமாக எடுத்து சிறப்பாக கற்க வேண்டும். இந்தி படித்தால் தான் வேலை என்பதை பொய்ப்பித்து வருகிறோம். வேலையில்லா திண்டாட்டம் இந்தி மாநிலங்களில் தான் அதிகம். அவர்கள் கற்பதற்கும் வேலை பார்ப்பதற்கும் தென் மாவட்டங்களை நாடி வருகின்றனர். இந்தி கற்பது நம் மாணவர்களின் நேரத்தை வீணடிப்பது. விருப்பமானால் அவர்கள் எந்த மொழியும் கற்றுக் கொள்ள தடை இல்லை. தாய் மொழியும் ஆங்கிலமும் நமக்கு இரு கண்கள் போன்றன. ஆங்கில வழிப் பள்ளிகள் உருப் போட்டு வாந்தியெடுக்கும் கல்வி முறையை கடைப் பிடிக்கின்றன. நோபல் பரிசுப் பெறும் தகுதி உள்ள ஒரு மாணவரைக் கூட இதுவரையில் உருவாகினதில்லை. அவைகள் கொள்ளை அடிப்பதிலேயே நாட்டம் கொண்டுள்ளன.
Name : S. MURALIDHARAN Country : India Date :8/3/2012 4:34:18 PM
இந்தத் தமிழறிஞர்கள் 'நாங்களும் இருக்கிறோம்', என்பதை வெளி உலகுக்குக் காட்டிக்கொள்ள அவ்வபோது இப்படி ஏதாவது சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். அதை நாம் 'கண்டுக்க' வேண்டாம். தாங்கள் சொல்வதை தங்கள் பிள்ளைகள் கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது அவர்களுக்கே தெரியும். காலத்துக்கும், ஊருக்கும் உதவாத தீர்மானங்கள்!
Name : maravan Country : United Kingdom Date :8/3/2012 4:33:31 PM
sikkindar ஆங்கிலத்தை படித்து நீ நைகீரியாவில் பிழைப்பு நடத்து மகன் மலாய் படித்து மலேசியாவில் பிளைகட்டும் இன்னும் யாரவது இருந்தால் வேறு மொழி சொல்லிகொடு நான் ஐரோப்பிய நாடொன்றில் வாழ்கிறேன் ஜெர்மானியன் டொச் தவிர வேறொன்றும் பேச மாட்டான் அவளவு மொழி உணர்வு அந்தநாடு மிகபனகார நாடு நீயும் நானும் மற்ற நாடுகளுக்கு பிச்சை எடுக்க வந்திட்டம் தயவுசெய்து உணர்வோட இருகிறவன கொச்சைபடுத்த வேண்டாம் அவர்கள் தமிழில் படித்து சிறப்பான பொருளாதாரத்தை கட்டி எழுப்பி மறதமிலர்களாக வாழட்டும் வாழ்க தமிழ்நாடு
Name : sikkandar Country : Nigeria Date :8/3/2012 3:26:56 PM
தமிழரிஞர்கள் தமிழை வைத்து பிழைப்பு நடத்துகிறவர்கள்.நாங்கள் ஆங்கிலத்தை வைத்து வெளிநாட்டில் பிழைப்பு நடத்துகிறவர்கள். அவரவருக்கு எது தேவை என்பதை அவரவர்தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர ,இந்த நான்கு பேர் மட்டுமல்ல. என் மகனுக்கு மலாய் மொழி பேச தெரியும்.மலேசியாவில் வேலை கிடைத்தது. நான் ஆங்கில இலக்கியம் ,கம்புட்டர் படித்தேன் .இன்றும் ஆப்பிரிக்காவில் நல்ல பணி.நான் தமிழ் மட்டும் படித்திருந்தால்,தமிழ்நாட்டிலேயே வேலை கிடைக்காது. உண்மை நிலை தெரிந்து பேசுங்கள்.
Name : bekey Country : Nigeria Date :8/3/2012 1:55:47 PM
ஏற்கெனவே ஹிந்திய சொல்லி தமிழ் நாட்டை விட்டு வெளியில போகமுடியாம பண்ணியாச்சு , இப்போ இந்தியாவ விட்டு வெளியில் பகமுடியதபடிக்கு வழி பண்ணி எல்லாம் குட்டிசுவருதான் . இங்க எல்லா விலை வாசியும் ஏறிப்போச்சி , எல்லா துறைளையும் வாரிசுகள் மட்டுமே நல்லா சம்பாதிக்கிறாங்க . பொதுஜனம் ஏழை அடிமையாவே இருக்கணும் என்று நினைக்கிறது சுயநலம்
Name : tamil Date :8/3/2012 1:33:28 PM
முதல சொன்னுவுக குழந்தைக எல்லாம் தமிழ் மீடியம் ஸ்கூல் படுகிஎதுகள செக்panuka
Name : Ravi-Swiss Date :8/3/2012 12:26:09 PM
இதனை அரசு எங்கே கேட்கப்போகின்றது''? இரண்டு இடங்களிலும் பெண்களை விட்டு' அடுப்படி போன்று' நாடும் குட்டி சுவராகி விட்டது'' திருடராய் பார்த்து திருந்தா விட்டால்' திருட்டை ஒழிக்க முடியாது' தமிழர்கள் தங்கள் இனத்துக்கு முன் உரிமை கொடுக்காமல்' வேற்று இனத்துக்கு முன்னுரிமை கொடுத்தது' இதனால் தமிழர்களே இதுக்கும் பொறுப்பு' சினிமா சின்னத்திரை டாஸ்மார்க் காட்டி' எமது சமுகம் இப்போ பின் தள்ளப்படுகின்றது' பாளர் வகுப்பில் இருந்தே ஆங்கிலக் கல்வி என்று கூறும் அரசுகள்' தங்கள் டிவிக்களில் நிகழ்சிகளை ஆங்கிலத்தில் புகுத் துமா''? போனி ஆகாது என்று அவர்களுக்குத்தெரியும்' வட இந்திய அரசு காங்கிரஸ் அரசு தமிழர்களுக்கு சார்பு இல்லாதது என்று புரிந்தும்' அதனுடன் கூட்டுவைக்கும் தமிழக சமுகம் கட்சிகளை என்னவென்று சொல்வது' ஒற்றுமையாக இருக்கும் தமிழக கட்சிகளில் பிரிவுகளை இந்திய உளவுப் பிரிவு செய்கின்றது' இந்திய அரசின் ஒத்துளைப்பில்' இலங்கையும் இதனைத்தான் இப்போ செய்கின்றது' ஆண்ட பரம்பரை மீண்டுமொரு முறை ஆழ நினைப்பதில் என்ன தவறு' என்று அண்ணன் காசி ஆனந்தன் எழுதினார்' இது சாத்தியமா''? இல்லை என்பதே என் பதில்' பாவமே காரணம்'