ஹசாரேவின் உண்ணாவிரதம் 4வது நாளை அடைந்தது
ஊழலை ஒழிக்கவும், லோக்பால் மசோதாவை வலியுறுத்தியும் அண்ணா ஹசாரே மேற்கொண்டு வரும் காலவரையற்ற உண்ணாவிரதம் 4வது நாளை அடைந்துள்ளது. அண்ணா ஹசாரேவின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
அவரது ஆதரவாளர்களான அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு வார காலமாக உண்ணாவிரதத்தில் இருப்பதால் மருத்துவர்கள் உடனடியாக அவரை சிகிச்சைக்கு உட்படுத்த அறிவுறுத்தியுள்ளனர்.