தொடரை வென்றது இந்தியா
இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்றது இந்திய அணி. கொழும்புவில் நடந்த 4வது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
டாஸ் வென்று முத-ல் ஆடிய இலங்கை அணி 8 விக்கெட்டுக்கு 251 ரன் எடுத்தது. வெற்றி இலக்கான 252 ரன்னை 42.2 ஓவரில் எட்டியது இந்திய அணி. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3 - 1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
அபாரமாக விளையாடிய துணை கேப்டன் விராத் கோ- 119 பந்துகளில் 128 ரன் குவித்தார். ரெய்னா 58, சேவாக் 34, திவாரி 21 ரன் எடுத்தனர்.