ஹசாரே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக பேசி வருகிறார்: நாராயணசாமி
அன்னாஹசாரே குழுவினர் வன்முறையில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என்று மத்திய மந்திரி நாராயணசாமி கூறினார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு நேற்று காலை விமானம் மூலமாக மத்திய மந்திரி நாராயணசாமி புறப்பட்டு சென்றார். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதற்கு பிரதமர் ஆர்வமாக உள்ளார். ஆனால், இந்த மசோதாவில் சிறிய மாற்றங்களை செய்ய வேண்டும் என எதிர்கட்சிகள் சில திருத்தங்களை தந்து உள்ளன. அதேநேரத்தில், மத்திய அரசு தான் காலதாமதம் செய்து வருவதாக பிரசாரம் செய்வது சரியல்ல.
ஹசாரே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக பேசி வருகிறார். அவரை எதிர்கட்சிகள் தூண்டி வருகின்றன. காந்தி வழியில் போராட்டம் என கூறிவிட்டு பிரதமர், உள்துறை மந்திரி வீடுகள் முன் வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது. சென்னையில் ஹசாரே குழுவினர் நடத்து கொண்ட சம்பவம் தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்ப்பர்க்கிறோம். இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.