ராஜபக்சே சொல்லித்தான் தமிழர்களை கொத்து கொத்தாக கொன்றோம் : சிங்கள தளபதி பரபரப்பு
ஈழத்தில் நடந்த இறுதி கட்டப்போரின் போது முள்ளிவாய்க்காலில் விஷ கொத்துக்குண்டுகள் வீசி 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த போர்க்குற்றத்திற்கு எதிராக ஐநா சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டதால் இலங்கை அரசு பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் அந்நாட்டின் குருநாகல் பகுதியில் நடந்த படை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்நாட்டு படைத்தளபதி ஜெகத் ஜெயசூர்யா, ராஜபக்சே சொல்லித்தான் முள்ளிவாய்க்கால் பகுதியை படை நிர்மூலமாக்கியதாக கூறியுள்ளார். இது குறித்து அவர், ‘’கடந்த 2009ம் ஆண்டு இலங் கையின் வடக்குப்பகுதியில் சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளின் உதவியோடு போர் நடத்தினோம். கடைசியாக முள்ளிவாய்க்கால் பகுதியில் போர் நடத்துவதா? வேண்டாமா? என்று தோன்றியது.
ஏனென்றால் அந்த பகுதியில் 45 ஆயிரத்துக்கும் அதிக மான தமிழர்கள் வசித்து வந்தனர். அங்கு குண்டு போட்டால் ஒருவர் கூட மிஞ்ச மாட்டார்கள் என்று நினைத்தோம். மேலும் இறுதிக்கட்ட போரை நடத்தக் கூடாது என்று பல்வேறு நாடுகளும் வலியுறுத்தின.
இதையடுத்து அதிபர் ராஜபக்சேவிடம் ஆலோசனை நடத்தினோம். அப்போது அவர் எக்காரணம் கொண்டும் போரை நிறுத்த வேண்டாம் என்றும், சர்வதேச மிரட்டல்களுக்கு அடி பணியாமல் தொடர்ந்து திட்டமிட்டபடி தாக்குதல் நடத்துங்கள் என்று என்னிடம் தொலைபேசியில் உத்தர விட்டார். அவர் கொடுத்த தைரியத்தில்தான் போரை வெற்றி கரமாக நடத்த முடிந்தது. மேலும் போர்க்காலத்தில் அவர்தான் எங்களுக்கு பலமாக இருந்தார். அவர் மட்டும் மனிதாபிமான அடிப்படையில் இரக்கம் காட்டியிருந்தால் நம்மால் இறுதிக்கட்டப் போரில் வென்றிருக்க முடியாது. இறுதிக்கட்டப் போரில் நாம் வெல்ல உறுதுணையாக இருந்த நாடுகளையும், அவர்கள் செய்த உதவிகளையும் மறக்கவே முடியாது’’ என்ரு கூறியுள்ளார்.
ராஜபக்சே சொல்லித்தான் தாங்கள் தமிழர்களை கொத்து கொத்தாக கொன்றோம் என்பதையும் ஜெயசூர்யா கூறியுள்ளதால், இது ராஜபக்சேவின் போர்க்குற்ற செயல்பாடுகளுக்கு வலுவான ஆதா ரமாக, வாக்குமூலமாக உருவெடுக்கும் வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளன.