ஜூலை -15 : ஐ.பி.எஸ். அதிகாரிகள் சொத்து கணக்கை தாக்கல் செய்ய கெடு
அகில இந்திய ஆட்சிப்பணி விதிமுறைகளின்படி, ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஒவ்வொருவரும் தங்கள் அசையா சொத்து கணக்கை ஆண்டுதோறும் தாக்கல் செய்ய வேண்டும்.
ஜனவரி மாதம் 31-ந் தேதிக்குள் முந்தைய ஆண்டுக்கான சொத்து கணக்குகளை அவர்கள் தாக்கல் செய்ய வேண்டும். நாடு முழுவதும் உள்ள 3,325 ஐ.பி.எஸ். அதிகாரிகளில் 550 அதிகாரிகள், கடந்த 2011-ம் ஆண்டுக்கான சொத்து கணக்கை இதுவரை தாக்கல் செய்யவில்லை.
இந்த நிலையில், அந்த அதிகாரிகள் அனைவரும் வருகிற 15-ந் தேதிக்குள் சொத்து கணக்கை தாக்கல் செய்யும்படி மத்திய உள்துறை அமைச்சகம் கெடு விதித்துள்ளது.