புதுக்கோட்டை : தயார் நிலையில் தபால் ஓட்டுப் பெட்டி
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 12-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்காக தொகுதி 224 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. தொகுதி முழுவதும் உள்ள ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 964 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இதில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் உள்ளிட்ட பணியாளர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க முடியாது. அவர்கள் தபால் மூலம் தான் வாக்களிக்க முடியும்.
எனவே அவர்கள் வாக்களிப்பதற்காக புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. அந்த விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அளித்து வருகிறார்கள். தபால் ஓட்டுக்களை போடுவதற்காக தேர்தல் நடத்தும் அலுவலர் அறையில் தபால் ஓட்டு பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. இந்த பெட்டியில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் நாளுக்கு முந்தைய நாள் வரை பூர்த்தி செய்த தபால் ஓட்டு விண்ணப்பங்களை போடலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.