ஹசாரே குழுவினர் ஜூலை 25ல் உண்ணாவிரதம்
அன்னா ஹசாரே குழு உறுப்பினர்களில் ஒருவரான மனிஷ் சிசோடியா இன்று சிம்லாவில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர், ’’லோக்பால் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றாது. மேலும் அவர் ஏற்கனவே தாங்கள் கொடுத்துள்ள ஊழலில் தொடர்புடைய 14 மத்திய கேபினட் மந்திரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், வலுவான லோக்பால் மசோதா உருவாக்க கோரியும், ஜூலை 25ந் தேதி அன்னா குழுவினர் டெல்லி ஜந்தர் மந்தரில், அன்னா ஹசாரே முன்னிலையில் உண்ணாவிரதம் தொடங்கு வார்கள்’’ என்று அறிவித்தார்.