நாங்குநேரியில் இடி மின்னல் மழை: மூதாட்டி சாவு
நாங்குநேரியில் இடிமின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் பிள்ளைகுளத்தைச் சேர்ந்த ஜெயக்கொடி (67) என்பவர் பலியானார்.மண்ணெண்ணெய் வாங்கிவிட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தவர் மீது மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் பலத்த காற்று வீசியதால் அப்பகுதியில் சுமார் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைமரங்கள் சரிந்து விழுந்தன.