ஜெயலலிதாவிற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்த மாட்டேன்: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது உறுதி: சங்மா
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரான சங்மா தான் தேர்தலில் போட்டியிடுவது உறுதி என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தனியார் டிவி சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த சங்மா கூறியதாவது: ஜனாதிபதி தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன்; பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கூட்டணிகளின் ஆதரவு இல்லை என்றாலும் நான் போட்டியிடுவேன்; என்னை ஆதரிக்கும் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவிற்கும், ஒடிசா நவீன் பட்நாயகிற்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்த மாட்டேன். இவ்வாறு சங்மா உறுதிபட தெரிவித்துள்ளார்.