தமிழகம் கேரளாவின் குப்பை மேடாகிவிடும் அபாயம்
கேரளாவிலிருந்து தமிழகத்துக்குள் இறைச்சி, மருத்துவம் உள்ளிட்ட அபாயகரமான ரசாயன கழிவுகளை கொட்ட தடை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியிலிருந்து 15 வது கி.மீ.,ல் கேரள எல்லை துவங்குகிறது. பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு ஆறு முக்கிய வழித்தடமும், எட்டு குறுக்கு வழித்தடமும் உள்ளது. கேரளாவுக்கு தேவையான பால், காய்கறி, மாடு, கோழி இறைச்சி மற்றும் அத்யாவசிய பொருட்கள் பொள்ளாச்சி வழியாகத்தான் செல்கிறது.
தமிழகத்தால் பல்வேறு வழிகளிலும் பலன்பெறும் கேரளா, அதற்கு கைமாறாக, இறைச்சிகழிவுகள்,, மருத்துவகழிவுகள், மற்றும் சிலவகை ரப்பர் தொழிற்ச்சாலைகளின் ரசாயனக்கழிவுகளை தமிழகத்தில் தெரியாமல் கொண்டுவந்து கொட்டி வருகிறது.
கேரளாவில் கோழி இறைச்சிக்கழிவு, மருத்துவமனைக்கழிவு மற்றும் ரசாயன கழிவை கொட்ட அம்மாநில அரசு ஏராளமான நிபந்தனைகளை விதித்துள்ளது.
அதனால், தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கறிக்கோழி கொண்டு செல்லும் லாரிகளில், கோழி இறைச்சிக் கழிவுகள் திருப்பி அனுப்பப்படுகிறது. "சிமென்ட்' பைகளில் கொண்டு வரும் கழிவுகள் தமிழகத்திலுள்ள எல்லையோர கிராமங்களில் ரோட்டோரத்தில் வீசுகின்றனர்.
கேரளாவிலிருந்து தமிழகத்துக்கு 17ம் தேதி இரசாயன கழிவுகளை; பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில் உள்ள செடிமுத்தூர் கிராமத்தில் கொட்டப்பட்டது.
கழிவுகளை கொண்டுவந்து கொட்டிய லாரியை பிடித்து வைத்த பொதுமக்கள், மற்றும் மதிமுக வினர் சாலைமறியலில் ஈடுபட்டதை தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் பிடிக்கப்பட்ட லாரி உரிமையாளர்கள் மற்றும் ஆலை நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி, 24 மணி நேரத்தில் ரசாயன கழிவுகளை கேரளாவுக்கே திருப்பி அள்ளிச்செல்ல வைத்தனர்.
கேரளாவில் கழிவை கொட்டாமல் தமிழகத்துக்கு கொண்டு சென்றால், அம்மாநில அதிகாரிகள் அந்த வாகனத்துக்கு சிறப்பு அனுமதி வழங்கி வழியனுப்பி வைக்கின்றனர்.
இப்பிரச்னையில் அ.தி.மு.க.,- தி.மு.க., உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகள் எதுவும் அக்கறை காட்டாமல் வேடிக்கை பார்க்கின்றன. ம.தி.மு.க., மற்றும் பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட சில அமைப்பினர் மட்டுமே போராடிவருகின்றனர்.
இது குறித்து செய்தியாள்ளர்கள் கேட்டபோது கோவை மாவட்ட உதவி சுற்றுச் சூழல் பொறியாளர் செந்தில்விநாயகம் கூறுகையில்; கேரளாவிலிருந்து தொழிற்சாலை கழிவை கொண்டுவரும் போது, அம்மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர், "இது இயற்கை உரத்துக்கு பயன்படுத்தும் கழிவு' என்று சான்று கொடுத்தார்.
அது உண்மையல்ல.... இயற்கை உரத்தை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம். அதை தமிழகத்துக்கு கொண்டுய்வர வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், மருத்துவக்கழிவுகள், அபாயகரமானவை. வேறு மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்குள் கொண்டு வர அனுமதிக்கக்கூடாது. விதிமுறைக்கு முரணான இச்சம்பவம் தொடர்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
பத்து லட்ச்சத்துக்கும் அதிகமான மலையாளிகள் தமிழகத்தில் பிழைப்பு நடத்தி வருகிறார்கள், கேரளாவின் அன்றாட உணவுத்தேவைகள் அனைத்தும் தமிழகத்தை நம்பியே உள்ளது. இத்தனை யையும் தாண்டி தமிழகமக்களையும் அரசையும் முட்டாளாக்கும் கேரளா அரசின் நடவடிக்கைகளுக்கு உடனடியாக தடை போடவேண்டும், இல்லையானால் தமிழகம் கேரளாவின் குப்பை மேடாகிவிடும்.