பாராளுமன்றத்தின் மாண்பையும், கண்ணியத்தையும் காப்போம்: பிரதமர் பேச்சு
இந்தியாவில், பாராளுமன்றம் உருவாக்கப்பட்டு இன்றுடன் 60 ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளது. இதையொட்டி பாராளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் சிறப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன. டெல்லி மாநிலங்களவையில் இன்று (13.05.2012) நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில், பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்று பேசும்போது, இந்திய நாட்டின், நாட்டு மக்களின் பெருமைக்குரிய சாதனை, நமது பன்முக தன்மை கொண்ட ஜனநாயகம்தான். இந்திய பாராளுமன்ற ஜனநாயக அமைப்பின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை சமீப காலங்களில் மீண்டும் உறுதி செய்துள்ளனர். கூட்டாட்சி தத்துவத்தை வளர்த்து வருகிறது. நாம் சபையின் மாண்பையும், கண்ணியத்தையும் காத்து, புதிய அத்தியாயத்தை எழுத முடியும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.