பத்திரிகையாளர்கள் காலில் விழுந்து வணங்கினார் டைரக்டர் பாலாஜி சக்திவேல்
பாலாஜி சக்திவேல் டைரக்டு செய்து, லிங்குசாமி தயாரித்து வெளியிட்ட படம், `வழக்கு எண் 18/9'. புதுமையான கதையம்சம் கொண்ட இந்த படத்துக்கு, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருப் பதையொட்டி, பாலாஜி சக்திவேல், லிங்குசாமி ஆகிய இருவரும் நேற்று மாலை பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள்.
அப்போது, டைரக்டர் பாலாஜி சக்திவேல் உணர்ச்சி மிகுதியால் கண்கலங்கியபடி பத்திரிகையாளர்கள் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக தரையில் விழுந்து வணங்கினார்.
’’எனக்கு இதைதவிர, சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை’’ என்று அவர் கூறினார்.