நேபாளில் வெள்ளம்: 64 பேர் பலி
நேபாளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 64 பேர் பலியாகியுள்ளனர்.
நேபாளின் போகாரா என்ற பகுதி சுற்றுலாத்தளத்திற்கு பெயர் பெற்றது. இங்கு கடந்த இரு நாட்களாக பெய்த மழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்சி உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மூன்று வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட 64 பேர் பலியாயினர்.
இதில் 17 உடல்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கி பலியானர்களை தேடும் பணி நடக்கிறது.