புதுகை இடைத்தேர்தல் : தேர்தல் பணிக்குழுவுக்கு கூடுதலாக 9 பேர்
புதுக்கோட்டை இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்ற, மேலும் ஒன்பது பேரை, தேர்தல் பணிக் குழு பொறுப்பாளர்களாக, முதல்வர் ஜெயலலிதா நியமித்துள்ளார்.
ஜூன் மாதம் 12ம் தேதி, புதுக்கோட்டை தொகுதிக்கு, இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அ.தி.மு.க.,வில் தேர்தல் பணியாற்ற, அமைச்சர்கள் 32 பேர் உட்பட 43 பேரை, தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக, கடந்த 27ம் தேதி, முதல்வர் ஜெயலலிதா நியமித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக, தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில், அவைத் தலைவர் மதுசூதனன், கொள்கை பரப்புச் செயலர் தம்பிதுரை எம்.பி., மருத்துவ அணிச் செயலர் வேணுகோபால் எம்.பி., முன்னாள் மீனவர் பிரிவு செயலர் கலைமணி, அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணிச் செயலர் கமலக்கண்ணன், ரங்கசாமி எம்.எல்.ஏ., மாவட்ட செயலர்கள் ரவிச்சந்திரன், முருகானந்தம், ராஜ்யசபா எம்.பி., ரபிபெர்னாட் உட்பட ஒன்பது பேர், கூடுதல் தேர்தல் பணிக் குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்’’என்று கூறியுள்ளார்.