மறுவீடு அழைக்கச் சென்றபோது சாலை விபத்து! ஒரே குடும்பத்தைச் சேர்நத 4 பேர் பலி!
நாமக்கல்லில் நடந்த சாலை விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். இவர் திண்டுக்கல்லில் உள்ள தனது மகளையும் மருமகனையும் மறுவீட்டிற்கு அழைப்பதற்காக காரில் தன் குடும்பத்தினர் 14 பேருடன் சென்றார். கார் நாமக்கல் வழியாக சென்று கொண்டிருந்தபோது, புலவர் பாளையம் பகுதியில் உள்ள சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு பெண்கள், ஒரு சிறுவன் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதையடுத்து அருகே இருந்து சுங்கச்சாவடி ஊழியர்கள் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மறுவீடு அழைக்கச் சென்றபோது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.