கலெக்டரை மீட்க கையெழுத்து இயக்கம்
சத்தீஷ்கர் மாநிலம், சுக்மா மாவட்ட கலெக்டரான தமிழகத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பால் மேனன், கடந்த 21.04.2012 அன்று மாவோயிஸ்டுகளால் கடத்தி செல்லப்பட்டார்.
திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., பொறியியல் கல்லூரி எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் பிரிவில் படித்தவர் அலெக்ஸ். மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்ட அவர், நலமுடன் திரும்ப, கல்லூரியில், சில நாட்களுக்கு முன் சர்வ மத பிரார்த்தனை நடந்தது. ஜனாதிபதி, பிரதமர், தமிழக முதல்வருக்கு கல்லூரி மாணவர்கள் கடிதம் அனுப்பினர்.
கலெக்டரை மீட்பதில் இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகம், புதுச்சேரியில் உள்ள ஆர்.வி.எஸ்.கல்வி நிறுவன மாணவர்கள், கையெழுத்து இயக்கம் நடத்தினர். இதில், 25 ஆயிரம் பேரிடம் கையெழுத்து பெற்று, சத்தீஸ்கர் முதல்வர் ராமன்சிங்கிற்கு அனுப்பியுள்ளனர்.