வால்பாறையில் காயத்துடன் சுற்றும் புலி
கோவை மாவட்டம், வால்பாறை உருளிக்கல் எஸ்டேட் அருகே உள்ள சோலையார் அணைக் கரையில் பெரியார் நகர் உள்ளது.
கடந்த 2 நாட்களாக இப்பகுதியில் இரவில் மர்ம விலங்கின் நடமாட்டம் இருந்து வந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்த ஞானசேரகன் என்பவரது தொழுவத்தில் நேற்று முன்தினம் கட்டி வைக்கப்பட்டிருந்த கன்றுக்குட்டி ஒன்று கடி த்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது. அதே தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த பசுவையும் அந்த விலங்கு கடித்து குதற முயன்றுள்ளது. இதில் பசு படுகாயம் அடைந்தது. ஞானசேகரன் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
வனத்துறையினர் விலங்கு சிறுத்தையாக இருக்க கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் பாது காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
கடந்த 2 நாட்களாக பெரியார் நகர் பகுதியில் முகாமிட்டு விலங்கு பதுங்கி இருக்கும் என சந்தேகப்பட்ட இடங்களை கண்காணித்து வந்தனர்.
இதையடுத்து வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத் துறை மருத்துவருக்கு தகவல் அனுப்ப பட்டுள்ளது.
புலி, மாட்டை கொல்ல முயன்ற போது மாடு எதிர்தாக் குதல் நடத்தியதில் காயம்பட்டிருக்க கூடும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
வால்பாறை பகுதியில் சிறுத்தைகளால் மட்டுமே உயிர்பயத்துடன் உலவிய மக்கள் தற்போது புலி நடமாட்டமும் இருப்பது தெரிய வந்ததால் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். புலியை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.