சச்சின் டெண்டுல்கர் - சோனியாகாந்தி சந்திப்பு
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவை அவரது 10, ஜன்பத் இல்லத்தில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இன்று (26.04.2012) மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
சமீபத்தில் 100 சதங்கள் அடித்து வரலாற்று சாதனை புரிந்த சச்சினுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக அவரை சந்திக்க சோனியா விரும்பினார். இதையடுத்து சோனியாவை சச்சின் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது பிசிசிஐ நிர்வாகியும், ஐபிஎல் தலைவருமான ராஜிவ் சுக்லா உடன் இருந்தார்.
சச்சினுடன் அவரது மனைவியும் சோனியாவை சந்திக்க உடன் சென்றிருந்தார்.